பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலக பணிகள் துவக்கம்

Updated : மே 20, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசின் உத்தரவை அடுத்து அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் நேற்று முதல் செயல்பட துவங்கின.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் 24ல் ஊடரங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் சுகாதாரத்துறை காவல் துறை உள்ளாட்சி துறை வருவாய் துறை போன்ற அத்தியாவசிய துறைகள் முழுமையாக செயல்பட்டன.மற்ற அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன. நேற்று முதல்
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலக பணிகள் துவக்கம்

சென்னை: தமிழக அரசின் உத்தரவை அடுத்து அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் நேற்று முதல் செயல்பட துவங்கின.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் 24ல் ஊடரங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் சுகாதாரத்துறை காவல் துறை உள்ளாட்சி துறை வருவாய் துறை போன்ற அத்தியாவசிய துறைகள் முழுமையாக செயல்பட்டன.

மற்ற அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டன. நேற்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசு ஊழியர்கள் பணிக்கு வர அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

தலைமை செயலகத்தில் நேற்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தனர். செங்கல்பட்டு, தாம்பரம் திண்டிவனம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.பஸ் இயக்கப்படாத இடங்களில் வசிப்போர் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்தனர். அனைத்து துறை அலுவலகங்களிலும் கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. ஊழியர்கள் முகக் கவசம் அணிந்தபடி வேலை செய்தனர்.தலைமை செயலக வளாகத்தில் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் ஊழியர்கள் வீடுகளிலிருந்து மதிய உணவு எடுத்து வந்திருந்தனர். எழிலகம் வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தனர். சில அலுவலகங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. எனினும் போக்குவரத்து வசதி இல்லாததால் ஊரக பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில் பல ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
சென்னையில் 200 பஸ்கள் இயக்கம்-அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக சென்னையில் மட்டும் 200 மாநகர பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், தலைமை செயலக காலனி, பீட்டர்ஸ் காலனி, தாடண்டர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டன. பஸ்களில் பயணித்தவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயாராக இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மே-202004:04:00 IST Report Abuse
meenakshisundaram இவங்களுக்கு வார விடுமுறை தேவை இல்லை ,வருவதே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஞாயிறு அன்று அரசு அலுவலகங்கள் இயங்கட்டும்,அன்றும் பெஞ்சு தேய்க்கத்தானே அநேகர் செய்கிறார்கள்,சிலரே விதி விலக்கு.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-மே-202016:40:22 IST Report Abuse
ஆரூர் ரங் மாமூல்😉 வேலை துவங்கியிருக்குமே
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஏன் எங்கள் பெருமை மிகு தளபதி அவர்கள் பற்றிய செய்திகள் கடந்த 2 நாட்களாக வரவில்லை?? ஏதோ சதி நடக்கிறது. கேள்விகளால் அடிமைகளைத் திணற அடிப்பதாலா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X