ஏழைகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தை, சிறப்பாக அமல்படுத்துவதற்காக, மூன்று திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஏழைகள், குறைந்த தொகையில், பிரீமியம் செலுத்தும் வகையில், 'பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா' என்ற ஆயுள் காப்பீடு திட்டம், 'சுரக் ஷா பீமா யோஜனா' என்ற விபத்துக் காப்பீடு திட்டம், செயல்பாட்டில் உள்ளது.
ஆயுள் காப்பீடு திட்டத்தில், 18 முதல், 50 வயது வரையுள்ளவர்கள் சேரலாம். ஆண்டுக்கு, 330 ரூபாய் பிரீமியம் செலுத்தி, 2 லட்சம் ரூபாய் காப்பீடு பெறலாம். விபத்துக் காப்பீடு திட்டத்தில், ஆண்டுக்கு, 12 ரூபாய் பிரீமியம் செலுத்தி, 2 லட்சம் ரூபாய் காப்பீடு தரும் பாலிசியைப் பெறலாம்.அமைப்பு சாரா தொழிலாளர்கள், 18 முதல் 40 வயதுக்குள்ளவர்கள் ஓய்வு காலத்துக்குப் பின், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில், 'அடல் பென்ஷன் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக,அரசே தொகை செலுத்துகிறது.அதிகாரிகள் கூறுகையில், 'பி.எப்.ஆர்.டி.ஏ., எனப்படும் ஓய்வூதிய நிதி மற்றும் முறைப்படுத்துதல் ஆணையம், இந்த மூன்று திட்டங்களையும் இணைத்து செயல்படுத்த பரிந்துரைத்துள்ளது.'இதனால், ஓய்வூதிய திட்டத்தை சிறப்பாக அமலாக்க முடியும். தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் கிடைக்கும். கொரோனா பரவல் காலத்தில், ஒருங்கிணைந்து செயல்படுத்துவதால், நிதி நெருக்கடியும் தவிர்க்கப்படும்' என்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE