அத்தியாவசிய தேவைகள் பெறுவதில் சிக்கலா

Added : மே 19, 2020
Share
Advertisement

தெருவில் ஓடும் கழிவுநீர்

கொரோனா பீதியில் இருக்கும் நிலையில் பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் பல நாட்களாக தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா.- ராஜாமுரளி, பழங்காநத்தம்.

இழுத்தடிக்கும் 'இ-பாஸ்'

அரசு பள்ளி ஆசிரியரான நான் வெளி மாவட்டம் செல்ல வேண்டிய சூழலில் 'இ-பாஸ்'க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சித்தேன். ஆனால், இணையத்தளம் வேலை செய்யாமல் இழுத்தடிக்கிறது.- ஜாபர், அழகப்பன் நகர்.

தையலை அரசு அனுமதிக்குமா

ஊரடங்கு தளர்வில் பல தொழில்கள் இயங்க அரசு அறிவித்தது போல் தையல் தொழில் இயங்க அனுமதிக்க வேண்டும். வேலையின்றி வறுமையில் வாடும் தொழிலாளர்களின் நலன் காக்க அரசு முன்வருமா.- ராஜலட்சுமி, தெற்குமாசி வீதி.

கடைகளில் கூடுதல் விலை

திருநகர் பகுதியில் பல கடைகளில் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். உற்பத்தி விலையைவிட கூடுதலாக விற்கின்றனர்.- ஹர்ஷன், திருநகர்.

மதுரையில் மக்கள் கூட்டம்

கொரோனா நம்மை தாக்காது என நினைத்து கொண்டு மதுரையில் கடைகள், வங்கிகள் என பல இடங்களில் மக்கள் கூட்டமாக நிற்பதை பார்க்க முடிகிறது. ஊரடங்கு தான் தளர்ந்துள்ளதே தவிர கொரோனா தளரவில்லை என இவர்களுக்கு புரிய வைப்பது யாரோ.- கண்ணன், கோரிப்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X