பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கை விரைந்து முடியுங்கள்: டில்லி ஐகோர்ட்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Delhi, Bois Locker Room, Delhi High court, Case, Delhi HC, police probe, new delhi, டில்லி, ஐகோர்ட், பாய்ஸ் லாக்கர் ரூம்

புதுடில்லி: டில்லியின் பணக்கார வீட்டு பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கின் விசாரணையை வேகப்படுத்துமாறு போலீசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் 5 பள்ளிகளைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மாணவர்கள் சிலர் இணைந்து, இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' (Bois Locker Room) என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதில் தங்களுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவிகளின் புகைப்படம் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரித்து எப்படி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது என சாட்டிங்கில் ஈடுபட்டனர்.இந்த சாட்டிங் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற ஹாஷ்டேக் உடன் கடந்த வாரம் பரவியது.


latest tamil news


மகளிர் ஆணைய தலைவர் பரிந்துரையின் பேரில் டில்லில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவிகள் மற்றும் சிறுமிகளின் படங்களை மார்பிங் செய்த இளைஞர் மற்றும் பள்ளி மாணவர் ஒருவரை கைது செய்தனர். இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவு அல்லது சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியும், இவ்விஷயத்தை வெளிசத்திற்கு கொண்டு வந்த பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விரைந்து முடிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202015:39:49 IST Report Abuse
ஆப்பு முதல்ல அவனுகளை யாருக்கும் தெரியாம ரவுண்டு கட்டி அடியுங்க. அப்புறம் வழக்கு புண்ணாக்கெல்லாம் வெச்சுக்கலாம். ஏன்னா, வழக்கு பிசுபிசுத்து போயிரும்னு பட்சி சொல்லுது.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
19-மே-202013:26:11 IST Report Abuse
வாய்மையே வெல்லும் சுடர்மணியில் இருந்து "மணியை" உருவிட்டா சரியாயிரும் .. பிஞ்சிலேயே பழுத்த பழங்கள் உறுப்புடுவது முடியாத காரியம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-202011:31:45 IST Report Abuse
Lion Drsekar நீதிமன்றத்துக்கு பாராட்டுக்கள், கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சில வழக்கு என்றால் குறைந்தது மூன்று தலைமுறைக்கு நடக்கும், இப்படி இருக்க உடனடியாக நடத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பாராட்டப்படவேண்டிய ஒன்று, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X