தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்த திட்டம்: தமிழக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீசார் உஷார்

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தமிழகத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி, பெரியளவிலான போராட்டத்தில் குதிக்க தயாராகி வருவதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேற்கு வங்காளம், பீஹார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த, லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், பேக்கரிகள், ஜவுளி, இரும்பு தொழில், சாலை பணி உள்ளிட்ட அரசு பணிகள், கோழிப்பண்ணைகளில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையான உணவு உள்ளிட்டவை கிடைக்காததால், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பல மாவட்டங்களில் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில், வடமாநில தொழிலாளர்களின் போராட்டத்தில், போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, வேலூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களின் போது வடமாநிலத்தவர்கள் போலீசாருடன் மோதல் போக்கை கடைப் பிடித்தனர். நேற்று பீஹார் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, சேலம் கலெக்டர் அலுவலகநுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாவட்டம் தோறும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, அரசுக்கு எதிராக பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளவுத்துறை, அரசு, டி.ஜி.பி., திரிபாதியின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. அது மட்டுமின்றி, வடமாநில தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டும் சில அமைப்புகள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் இடங்கள் பட்டியலிடப்பட்டு, கண்காணிப்பு, பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202012:02:38 IST Report Abuse
ramkumar every part of india should be developed equally, then this problem of migrant labour will not arise. its due to the inefficient political system some states are backward, no employment avenue, plus too much population density in some states lead to this. in this some labour contractors may make money and local youths may not get employment due to that.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X