பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் செய்தித்தாள் நிறுவனங்கள்; ஸ்டாலின், வைகோவிடம் வலியுறுத்தல்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை; 'கொரோனா'வால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமருக்கு, எம்.பி.,க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று (மே.19ம் தேதி ) நேரில் சந்தித்து கோரிக்கை

சென்னை; 'கொரோனா'வால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமருக்கு, எம்.பி.,க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று (மே.19ம் தேதி ) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.latest tamil news'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளரும் ஐ.என்.எஸ்., துணைத் தலைவருமான இல. ஆதிமூலம், 'தி இந்து' பதிப்பக குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் , தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து, செய்தித்தாள் நிறுவனங்களின் நெருக்கடிக்கு தீர்வு காண, கட்சி எம்.பி.,க்கள் வாயிலாக, பிரதமருக்கு அழுத்தம் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


latest tamil newsஇதே கோரிக்கை தொடர்பாக, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news

ஸ்டாலின் அறிக்கை

இந்த சந்திப்பிற்கு பின் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதுகுறித்து, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வந்து, அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாக செயல்படுவதற்கு தி.மு.க., துணை நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளினை நேரில் தெரிவிப்பதற்காக மூத்த பத்திரிகையாளர்களான தினமலர் ஆதிமூலம், இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கைக் கடிதத்தை அளித்தனர்.அதில், அவர்கள் மூவருடன், தினத்தந்தி பாலசுப்ரமணிய ஆதித்தன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.
நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்து, சமூக வலைதளத்தின் பரப்பு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், மக்களிடம் உண்மைச் செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அதிகம்.
அவை நெருக்கடிக்குள்ளாவதிலிருந்து மீளும் வகையில்,
- மத்திய அரசு, பத்திரிகை அச்சுக்காகிதம் மீதான வரியைக் குறைக்கவேண்டும்;
- அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்;
- காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும்; இவைதான் பத்திரிகைத் துறையின் முக்கியமான கோரிக்கைகள்.
பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் நிறைவேற தி.மு.க., துணை நிற்கும் என்ற உறுதியினை அவர்களிடம் வழங்கினேன். மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.க., எம்,பி.,க்கள் நிச்சயம் துணை நிற்பார்கள். பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினையும் வழங்கினேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
25-மே-202016:00:16 IST Report Abuse
Parthasarathy Ravindran அவர்களுக்கு எப்போவும்போல் நீங்கள் உதவலாமே மதிய அரசு எதற்கு. தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது என்று சொல்கிறீர்கள் அவர்கள் உதவி உங்களுக்கு எதற்கு. மத்திய அரசு உதவி செய்தால் நீங்கள் செய்தது என்று ஊடகங்களை வைத்து கூறிக்கொள்ளவா?
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
21-மே-202022:33:11 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இப்பத்தான் சோனியா பத்திரிக்கைகளுக்கு விளம்பரமே கொடுக்க வேண்டாமென்று பிரதமருக்கு ஐடியா கொடுத்தார். பத்திரிக்கையாளர்கள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பார்த்து விளம்பரமும் காசும் பெற்றுக் கொடுக்க சொல்கிறார்கள். தினமலர் மணி துக்ளக் போன்ற ஒரு சில பத்திரிகைகள் தவி மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஸ்டாலின் காலடியில் அவர் இடும் கட்டளைக்கு ஏற்ப ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.அதனால் இவர்கள் தங்கள் மூஞ்சியை பிரதமர் முன்பு நீட்ட வெட்கப் படுகின்றனர்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202016:36:27 IST Report Abuse
Thiagarajan Kodandaraman Not eligibile this man solving your PROBLEM
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X