அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா: ஸ்டாலின் கேள்வி

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
DMK, Stalin, June 15, 10th Exam, Postponed, CoronaVirus, MK Stalin, corona, covid-19, corona outbreak, TN governemnt, AIADMK, Tamil Nadu, TN news, திமுக, ஸ்டாலின், ஜூன்15, 10ம்வகுப்பு, பொதுத்தேர்வு, ஒத்திவைப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., உடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர், ஜூன் 1ல் துவங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


latest tamil news


இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
20-மே-202009:08:51 IST Report Abuse
Sundar He is always pessimistic. WHO informed the mankind shall live with co-existing of virus.Government shall act to certain limit according to the recommendation of expert professionals. The administration has taken more precautions and preventive measures. People has to co-operate. Even after taking hard actions, people has are not following the advice of the government. No vaccine is found. Till then social distancing is the only remedy to break the chain and eradicate the virus.
Rate this:
Cancel
venkata - chennai ,இந்தியா
20-மே-202000:48:36 IST Report Abuse
venkata முதல்வர் பதவிக்குன்னு எடப்பாடி அவர்களையும் வெட்டிக் கேள்வி கேட்க்றதுக்குன்னு சுடலையையும் ஆண்டவன் ஏவி விட்டிருக்கார். கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க. விடாம கேளுங்க .
Rate this:
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
20-மே-202000:03:26 IST Report Abuse
M.Balakrishnan உடன்பிறப்புகளின் 10 லட்சம் ரூபாயை தன் கையில் தயாராக வைத்துக்கொண்டு இழவுக்காக காத்திருப்பவரிடமிருந்து வேறென்ன பெரிதாக எதிர்பார்க்க முடியும் இந்தி ஒலிகயோட நிறுத்திக்கலாம். சதா சாதனத்தை வேரறுப்பது எல்லாம் வேண்டாம். அய்யோ சீட்டு கொஞ்சம் கசங்கி இருக்கு, அதான் சரியா வரல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X