பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Kashmir, Hizbul_Mujahideen, Militants, Killed, Encounter, Srinagar, J&K, Jammu and Kashmir, Terrorist, Hizbul Mujahideen, police personnel, Mobile internet, telephone services, காஷ்மீர், ஹிஸ்புல் முஜாகிதீன், என்கவுன்டர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹடல் பகுதியில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹடல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை நோக்கி, அங்கு பதுங்கி இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர், இரு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.


latest tamil news


என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளில் ஒருவன் ஸ்ரீநகரை சேர்ந்தவன் என்றும் மற்றொருவன் புல்வாமா பகுதியை சேர்ந்தவன் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் சிலர் காயமடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-மே-202020:23:50 IST Report Abuse
வெகுளி 2 பயங்கரவாதிகள் இறந்ததால் காஷ்மீரில் இன்றய தேவை ..... அதாவது 144 தடை உத்தரவு....
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-202018:49:37 IST Report Abuse
Janarthanan கொரோனா நேரத்தில் ஆபரேஷன் கிளீன் கட்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார்கள் ,அடுத்த நடவடிக்கை காஸ்மீர் இருப்பிட சான்றிதழ் கிடைக்க புது விதிமுறைகள் கொண்டு வந்து உள்ளனர் இதனால் வேலைபார்த்தவர்கள் /பண்டிட்கள் /திருமணம் ஆகி வெளியில் போனவர்கள் என பலரும் எல்லோரும் நண்மை அடைய போகிறார்கள் காஸ்மீர் டெமோகிராபி மாற்றினால் தான் தீவிரவாதிகள் உருவாகுவதை நிறுத்த முடியும் இந்த அரசால் இந்த மாதிரி தைரியமான முடிவு எடுக்க முடியும்
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா உள்நாட்டு தீவிவாதம் மிகப்பெரிய சவால் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X