கொரோனாவை 4 நாளில் குணப்படுத்தும் மருந்து கலவை: வங்கதேச டாக்டர்கள் கண்டுபிடிப்பு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
CoronaVirus, Effective Drug Combination, Cure, Covid-19, Patients, Bangladeshi Doctors, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, india,corona, corona patients, corona treatment, corona drug, கொரோனா, வைரஸ், தடுப்பு மருந்து, வங்கதேசம், டாக்டர்கள், கண்டுபிடிப்பு, மருந்து கலவை

டாக்கா: கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக வங்கதேச டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பரிதவித்து வருகின்றன. உலக ஆராய்ச்சியாளர்களும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடந்த 6 மாதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்றளவும் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பு மருந்தினை கண்டறியவில்லை. சில நாடுகள் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றதாகவும், மனிதர்களுக்கு சோதனையிட இருப்பதாகவும் கூறின. இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற டாக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது.


latest tamil newsதரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு இவர்மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர். 60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4ம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
22-மே-202007:50:21 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இது உண்மையானால் வங்கதேச மருத்துவர்கள் பாராட்டுக்குரியவர்கள். பாராட்டாக காத்திருக்கிறோம்.
Rate this:
Cancel
Vivekanandhan - Coimbatore,இந்தியா
19-மே-202020:31:28 IST Report Abuse
Vivekanandhan ரொம்ப நல்ல விசயம். எத்தனை bsl 3 லேப் இருக்கு அங்கே?
Rate this:
Cancel
Ranganathan -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-202019:58:13 IST Report Abuse
Ranganathan Congratulations
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X