உ.பி.யில் முலாயம் கட்சி பிரமுகர், மகனுடன் சுட்டுக்கொலை

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
லக்னோ: உ.பி.யில் நிலத்தகராறில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் அவரது மகன் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.உ.பி. மாநிலம் வடக்கு மாவட்டம் சம்பல் மாவட்டம் சான்சோயி என்ற கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தி்ட்டத்திற்கான சாலை பணிகள் நடந்து வந்தன.சாலைப்பகுதியை ஆய்வு செய்ய சென்ற இப்பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர்
Samajwadi Party Leader, Son, Shot Dead, UP, Sambhal, Samajwadi Party, Chote Lal Diwakar, son, Sunil, Lucknow, politician, Delhi, Shamsoi village, Savinder, Firoz Khan

லக்னோ: உ.பி.யில் நிலத்தகராறில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் அவரது மகன் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உ.பி. மாநிலம் வடக்கு மாவட்டம் சம்பல் மாவட்டம் சான்சோயி என்ற கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தி்ட்டத்திற்கான சாலை பணிகள் நடந்து வந்தன.
சாலைப்பகுதியை ஆய்வு செய்ய சென்ற இப்பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி பிரமுகர் சோட்டே திவாகர், இவரது மகன் சுனில் ஆகியோர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து சாலைப்பணிகள் நடப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil newsஇதில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கோஷ்டியினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில் அங்கு துப்பாக்கியுடன் வந்திருந்த இரு ஆசாமிகள் சோட்டேதிவாகரையும், அவரது மகன் சுனிலையும் சுட்டதில் தந்தையும், மகனும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட இருவரும் தப்பியோடியதால் அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-மே-202021:59:50 IST Report Abuse
தல புராணம் சுடப்பட்டு இறந்தவர்கள் இந்த வீடியோவில் காட்டப்படவில்லை. ஆனாலும் அவர்களின் பெயர் விவரமாக சொல்கிறார்கள். இந்த வீடியோவில் முழுக்க முழுக்க "துப்பாக்கியுடன் வந்திருந்த இரு ஆசாமிகள்" தான் காட்டப்படுகிறார்கள். இருந்தாலும், இவர்கள் பெயரை எந்த மீடியாவும் சொல்லவில்லை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-202019:05:07 IST Report Abuse
Lion Drsekar இன்று அனைத்துமே கட்சிகள் இல்லாமல் இயங்க முடியாத நிலை, இடம் வாங்கினால், வீடு கட்டினால், தொழில் துவங்கினால், வேலையே இல்லாமல் சும்மா இருந்தால், எப்படி இருந்தாலும் அனைவரும் ஏதாவது ஒரு நிலையில் இவர்களது சேவையை நாடவேண்டிய ஒரு நிலை, அப்படியே நாம் நேரில் சந்தித்து அதிகாரிகளிடம் பேசினாலும் அவர்கள் இவர்களைக் கைகாட்டி அனுப்புவது ஓர் சடங்காகிப்போனது. இதுவாவது பரவாயில்லை சென்னை போன்ற பெருநகரங்களில் நம் வீட்டுக்கே சுற்று சுவர் எடுக்க யார் யாருக்கோ எங்கிருந்து ஆட்டுவிக்கும் நபர்களுக்கெல்லாம் கப்பம் கட்டவேண்டிய ஒரு நிலை,. கொரோனாபோல் , இயற்க்கை ஏதாவது ஒரு பாடம் கர்ப்பித்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
19-மே-202019:01:52 IST Report Abuse
நக்கல் பிஜேபி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று இப்போ ஒரு கும்பல் கிளம்பும்....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
19-மே-202022:00:45 IST Report Abuse
தல புராணம்குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்ன்னு சொல்றது சரிதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X