டாக்டர்களுக்கு உதவ நிதி சேகரித்த இரட்டையர்கள்| Delhi twins raise money for hazmat suits, PPE kits | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டாக்டர்களுக்கு உதவ நிதி சேகரித்த இரட்டையர்கள்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
தொற்றுநோய், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, corona, coronavirus, covid-19 pandemic, delhi, twins, hazmat suits, PPE kits, covid-19, corona, health workers, teenagers, Veer Ojas, Manya Anandi, Personal Protective Equipment, Gurgaon, corona warriors, health, டில்லி, இரட்டையர்கள்,

புதுடில்லி: கொரோனா வைரசை தடுப்பு பணியில் முன்னின்று செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு உதவி செய்ய டில்லியை சேர்ந்த இரட்டையர்கள் தாங்கள் சேமித்த பணத்துடன், நண்பர்கள், உறவினர்களிடம் நிதியுதவி சேகரித்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு ஏராளமானோர் பல உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என டில்லியை சேர்ந்த வீர்ஓஜாஸ் மற்றும் மன்யா ஆனந்தி என்ற இரட்டையர்கள் முடிவு செய்தனர். டில்லியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சகோதர - சகோதரிகள், நிதி சேகரித்து டாக்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்தனர். 10 ஆயிரம் கையுறைகளை வாங்க எந்த வகையில் எல்லாம் பணத்தை சேமிக்க முடியுமோ, அந்த வகையில் எல்லாம் பணத்தை சேமித்தனர். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் எல்லாம் பேசி பணம் சேகரித்து, கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்க 500 பிபிஇ கிட்களை வாங்கி கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் 4 லட்சம் ரூபாய் பணம் சேகரித்து, 500 ஹம்ஜாட் சூட்கள், ஆயிரம் மாஸ்க்குகள், 8,500 நைட்ரில் கிளவுஸ்கள், 500 ஷூ கவர்களை வாங்கி கூர்கான் அரசு மருத்துவமனைக்கு கொடுத்தனர். அவர்களுக்கு 9 வயது முதலே நிவாரண பணிகள் மற்றும் மாணவர் திட்டங்களில் பங்கேற்றனர்.


latest tamil newsஇது தொடர்பாக வீர்ஓஜாஸ் மற்றும் மன்யா ஆனந்தி கூறுகையில், ஆராய்ச்சி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. உதவி செய்வது குறித்து நாங்கள் ஆராய்ந்ததுடன், டாக்டர்களிடம் பேசி என்ன தேவை என்பது குறித்து அறிந்து கொண்டோம். கொரோனா இந்தியாவுக்கு வந்த உடன், இதனை சமாளிக்க நமது நாட்டின் சுகாதார அமைப்பு குறித்து கவலை கொண்டோம். இதனால், டாக்டர்களுக்கு தரமான பிபிஇ கிட்கள் கிடைக்க உதவ வேண்டும் என முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X