விவசாய மாநிலமாக மாறிய தெலுங்கானா ; முதல்வர் சந்திரசேகர ராவ்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசின் புரட்சிகரமான நடவடிக்கைகளால் நமது மாநிலம் விவசாய மாநிலமாக மாறி வருகிறது என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.latest tamil newsதெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பிரகதிபவனில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசின் புரட்சிகரமான நடவடிக்கைகளாலும், மாநிலத்தில் ஏற்கனவே வளமான மண் போன்ற பல்வேறு வளங்களுடன் சிறந்த காலநிலைகளும் உள்ளதால் நமது மாநிலம் விவசாய மாநிலமாக மாறி வருகிறது என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது : நாட்டில் விவசாயத்தை காக்கவும், விசாயிகளின் நலனை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு சிறப்பான பலத்திட்டங்களை ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானாவில் விவசாய மக்களின் நலனை கருத்திற்கொண்டு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், பல விவசாயிகள் பலனடைந்துள்ளனர். மேலும் ஐதராபாத்தில் உள்ள பதஞ்செருவை தளமாக கொண்ட அரை வறண்ட வெப்ப மண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையம் (The International Crops Research Institute for the Semi-Arid Tropics) மூலம் நமது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் கருப்பு, சிவப்பு மற்றும் களிமண் போன்ற மண் வளங்களின் தன்மைகளை பரிசோதித்து, அதன் தன்மைக்கு ஏற்ப வெப்பநிலைகளுடன் தகுந்த பயிர்களை சாகுபடி செய்வதற்கான காலநிலை எங்களிடம் உள்ளது.


latest tamil newsமாநிலத்தில் 900 மி.மீ பல்வேறு நிலப்பரப்புகளுடன் சராசரி மழைப்பொழிவும் இருப்பதால், பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்ய ஏற்றது. அத்துடன் வெள்ளம் மற்றும் சூறாவளி பாதிப்புகளுக்கு தெலுங்கானா உள்ளாகாது. பாதுகாப்பாக இருக்கிறது. நமது மாநில விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள். மாநில விவசாயிகளுக்காக ரைத்து பந்து மற்றும் ரைத்து பிமா போன்ற நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின்படி விவசாயிகள் தங்களிடம் உள்ள பட்டா, பாஸ்புத்தகம் மூலம் எளிதாக வங்கி கடன்களை பெற இயலும். மாநிலம் முழுவதும் உள்ள 2.38 கோடி ஏக்கர் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், 1.4 கோடி ஏக்கர் விவசாய நிலமாக அறியப்பட்டு அவை முறையாக டிஜிட்டல் முறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களும் விசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக ரைத்து பந்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரைத்து பிமா திட்டத்திற்கு இம்முறை கூடுதலாக ரூ.1100 கோடியை செலவளிக்க உள்ளோம். அதன்படி , இறந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினோம். பாசன திட்டத்திற்காக அரசு 90 சதவீதமானியம் வழங்குகிறது. இது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 95 சதவீதத்தையும், பசுமை வீடுகளுக்கு 75 சதவீத மானியத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து, பண்ணை இயந்திரமாக்கலின் கீழ், டிராக்டர் மற்றும் அறுவடை செய்வதற்கான கருவிகளையும் வழங்கி வருகிறோம்.

மேலும் விவசாய திட்டங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், மோசமான மற்றும் தரமில்லாத விதைகளை விற்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்திற்கு 90 லட்சம் டன் நெல் மூட்டைகளை அனுப்பி தெலுங்கானா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு நாங்கள் 50 லட்சம் டன்களுக்கு மேல் கடக்கவில்லை. இது ஒரு புரட்சி தவிர வேறில்லை. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நெல் தானியங்களை கொள்முதல் மையங்கள் மூலமாக வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X