'அம்பான்' புயல்: ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement
Heavy Rain, Odisha, Bengal, Cyclone Amphan, West Bengal, cyclone, National Disaster Response Force, NDRF, NDRF chief, SN Pradhan, cliamte, weather

சென்னை : சூப்பர் புயல், 'அம்பான்' கரையை கடக்கவிருப்பதையெடுத்து ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழல்கிறது. இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. நாளை மாலை அல்லது இரவில், மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்.
புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.


latest tamil news



இந்நிலையில் புயல் காரணமாக இன்று ஒடிசா, மேற்குவங்க மாநில கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புள்ள ஒடிசா கடலோர பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X