சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement
TN,Tamilnadu,corona virus, covid 19, தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் இன்று(மே 19) புதிதாக 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய், குவைத், மலேசியாவிலிருந்து வந்த 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


latest tamil news



மேலும் 3 பேர் இன்று உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த உயிர் பலி 84 ஆனது. உயிரிழந்த 3 பேரில் இருவர் சென்னையிலும், ஒருவர் திருவள்ளூரிலும் உயிரிழந்தனர். இன்று ஒரே நாளில் குணமாகி 489 பேர் வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமானோர் எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X