'கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்': மலேசியா அரசு அறிவிப்பு

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement

கோலாலம்பூர்: 'மலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்' என, மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.latest tamil newsமலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news
'உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த கடந்த பிப்ரவரி மாதத்தில், கோலாலம்பூரில் மாநாட்டை நடத்த அனுமதித்திருக்கக் கூடாது. அனுமதி வழங்கிவிட்டு, மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தமானது' என, பல்வேறு தரப்பினரும் மலேசிய அரசை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
20-மே-202007:09:36 IST Report Abuse
s t rajan இதற்கு ஒரே தீர்வு இந்த மைனாரிட்டி போர்வையை நீக்கி அனைத்து இந்தியர்கள் ஒரு common civill code என் அடிப்படையில் சட்டதிட்டங்களை மீறாமல் நடந்து கொள்ளச் செய்வது தான்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202001:38:09 IST Report Abuse
Tamilan மலேசியாவில் மட்டுமல்ல சிங்கப்பூரில் அதிகமானதற்கும் மலேசிய மாநாட்டுக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடிக்கவேண்டும் . ஒன்று தொழிலாளர் அதிகமுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் இந்த மாநாடு சென்று வந்திருக்கலாம். அல்லது இந்த மாநாட்டிலிருந்து ஒருசில விஷமிகள் தொழிலாளர் பகுதிகளுக்கு சென்று வேண்டுமென்றே பரப்பிவிட்டிருக்கலாம் . .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202001:29:37 IST Report Abuse
Tamilan இப்போது இவர்களே ஒப்புக்கொண்டார்கள் . இந்த மாநாட்டின் மூலம் தான் இந்தியாவிலும் இரட்டிப்பானது . மாநாட்டை நடத்தியவர்களை சும்மா விடக்கூடாது . இருப்பினும் இவர்கள் திட்டம் போட்டு செய்தார்களா அல்லது இவர்களின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாநாட்டை உலகளாவிய விஷமிகள் உலகில் அல்லது பல நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த பயன்படுத்திக் கொண்டார்களா என்பதையும் கண்டறியவேண்டும் . அதை முதலில் நடத்திய மலேசிய அரசு முன்னின்று நடத்த வேண்டும் . தன் நாட்டில் இஸ்லாமிய மதத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தை கொஞ்சம் குறைத்து மற்ற மதங்களை மதிக்க கற்றுக்கொள்ள இது ஒரு சரியான தருணம் . போக சவுதியிலிருந்து , ஈரானிலிருந்தும் பரவியதும் அதிகம் . அடுத்த ஆண்டு முதல் ஹஜ் செல்வதற்கு இந்திய அரசியல் சட்ட அரசுகளே ஊக்குவிப்பதை , மான்யம், சலுகைகள் அளிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X