அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகைகளை பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ வேண்டுகோள்

Updated : மே 20, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: 'பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகை உரிமையாளர்கள், 'ஹிந்து' என்.ராம், 'தினமலர்' எல்.ஆதிமூலம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, தற்போது, பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்தனர்.'தினத்தந்தி'
பத்திரிகை, பாதுகாக்க, வேண்டும், பிரதமர், வேண்டுகோள்,வைகோ

சென்னை: 'பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பத்திரிகை உரிமையாளர்கள், 'ஹிந்து' என்.ராம், 'தினமலர்' எல்.ஆதிமூலம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை சந்தித்து, தற்போது, பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்தனர்.

'தினத்தந்தி' உரிமையாளர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் சார்பில், மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தையும் வழங்கினர்.


latest tamil news
அந்த கடிதத்தில், 'அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும்; நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து, வர வேண்டிய விளம்பர கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும்; அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்' என, கோரி இருந்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர். பத்திரிகை உரிமையாளர்களின் கோரிக்கைகள், முழுக்க முழுக்க நியாயமானவை.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தேன்.இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
20-மே-202010:42:19 IST Report Abuse
Balaji andha arnaaba adichcha vevagaaram shaamiyo?
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
20-மே-202008:58:40 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி முதலில் கட்சி சார்பாக நடத்தப்படும் பத்திரிக்கைகளையும் தேசத்துக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தும் பத்திரிக்கைகளையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
20-மே-202008:51:43 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வைகோவிடம் தருவதும் உப்பைக் கடலில் கரைப்பதும் ஒன்று. ஊரடங்கு காலத்திலும் நிற்காமல் வியாபாரம் நடத்தி சம்பாதித்த பத்திரிகைத் துறைக்கு வரி குறைக்கக் கூடாது. விளம்பரத்தில் நிறைய வரவுள்ளது. அரசு துறை விளம்பரக் கட்டணங்களை மெதுவாகத்தரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X