பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை; சந்திரசேகர ராவ்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்குகளில் தளர்வுகளுடன் கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்கலாம் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பிரகதிபவனில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதல்வர் கூறியதாவது : தெலுங்கானா இன்று அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் , கடைகள் , தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து இயல்புநிலைக்கு வரும். கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர மற்றவை பசுமை மண்டலங்கமாக அறிவிக்கப்பட்டன.

ஐதராபாத்தில் கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஐதராபாத்தைத் தவிர்த்து, டி.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் காலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் அதன் சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும். டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மாநிலம் முழுவதும் சவாரி செய்ய அனுமதிக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும். மாநிலத்தில் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கும் அனுமதியளிக் கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் இருக்காது, அங்கு யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐதராபாத் நகர பகுதிகளின் (GHMC ) வரம்பின் கீழ் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். "கட்டுப்பாட்டு பகுதிக்கு தடை விதித்ததைத் தவிர, அந்த பகுதிக்கு அல்லது வெளியே எந்த இயக்கத்தையும் காவல்துறை அனுமதிக்காது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.


latest tamil news




எவ்வாறாயினும், அனைத்து வழிபாட்டுத் தலங்கள், மதக் கூட்டங்கள், விழா அரங்குகள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிற கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படாது. அனைத்து வணிக மற்றும் தனியார் நிறுவ அமைப்புகளும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.முகமூடிகள் இல்லாமல் சாலைகளில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மக்களும் நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புடன் தங்களை காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X