டுப்ளின்: அயர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மருந்துகள், உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று வீடுவீடாக வழங்கும் சேவையை தொடங்கி உள்ளது.

அயர்லாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள் கொரோனாவிலிருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில் மன்னா ஏரோ என்கிற நிறுவனம் அந்நாட்டின் மணிகால் நகரில் வயதானவர்களுக்காக உணவு வகைகள், மருந்து வகைகளை ட்ரோன்கள் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் பணியை துவங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 600 நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளதாகவும். ஒரு விமானம் ஒரு நாளில் 100 முறை 4 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் சென்று வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE