நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு லட்சம் பேர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு லட்சம் பேர்

Updated : மே 21, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, 100 லிருந்து, ஒரு லட்சத்தை தொடுவதற்கு, 64 நாட்களாகியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிட்டால், நம் நாட்டில் பாதிப்பு வேகம் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், படிப்படியாக
நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு லட்சம் பேர்

புதுடில்லி : நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, 100 லிருந்து, ஒரு லட்சத்தை தொடுவதற்கு, 64 நாட்களாகியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிட்டால், நம் நாட்டில் பாதிப்பு வேகம் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், படிப்படியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவி, கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நம் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இங்கு இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நம் நாட்டில், நேற்று ஒரு லட்சத்தை கடந்தது.


latest tamil news





latest tamil news





latest tamil news





latest tamil news




இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 24 மணி நேரத்தில், நாடு முழுதும், 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 134 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 1,139 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 3,163 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100லிருந்து ஒரு லட்சத்தை தொடுவதற்கு, 64 நாட்களாகிஉள்ளது.ஆனால், பெரும்பாலான நாடுகளை ஒப்பிடும்போது, இதை விட குறைந்த நாளில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துஉள்ளது. அமெரிக்காவில், 23 நாட்கள்; ஸ்பெயினில், 30 நாட்கள்; ஜெர்மனியில், 35 நாட்களில், ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இத்தாலியில், 36 நாட்கள்; பிரான்சில், 39 நாட்கள்; பிரிட்டனில், 42 நாட்களில் கொரோனா பாதிப்பு, ஒரு லட்சம் எண்ணிக்கையை தொட்டது.
இதைக் கணக்கிட்டால், நம் நாட்டில் வைரஸ் பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. நம் நாட்டில், ஒரு லட்சம் பேரில், 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஒரு லட்சம் பேரில், 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில் கணக்கிடும் போது, அமெரிக்காவில், 431 பேர்; பிரிட்டனில், 361 பேர்; ஸ்பெயினில், 494 பேர்; இத்தாலியில், 372 பேர்; ஜெர்மனியில், 210 பேர்; பிரான்சில், 209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


தமிழகத்துக்கு இரண்டாவது இடம்



மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:நேற்று வரை, நாடு முழுதும், 39 ஆயிரத்து, 173 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பாதிப்பில், 38 சதவீதம் பேர், இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்; மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த, 24 மணி நேரத்தில் பலியான, 134 பேரில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டும், 51 பேர் இறந்துள்ளனர்.
குஜராத்தில், 35; உத்தர பிரதேசத்தில், 14 பேர்; டில்லியில், எட்டு பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில், ஏழு; மேற்கு வங்கத்தில், ஆறு; மத்திய பிரதேசத்தில், நான்கு; தமிழகத்தில், மூன்று; பஞ்சாப் மற்றும் காஷ்மீரில், தலா இருவர் இறந்துள்ளனர். பீஹார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், தலா ஒருவர் இறந்துள்ளனர்.

நாடு முழுதும், ஒரு லட்சத்து, 1,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பில், 35 ஆயிரத்து, 58 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மொத்தம், 11 ஆயிரத்து, 760 பேருடன், தமிழகம் இரண்டாவது இடத்திலும், 11 ஆயிரத்து, 745 பேருடன், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X