பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் 674 பேர் பலி| Brazil reports 674 COVID-19 deaths in one day | Dinamalar

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா ; ஒரே நாளில் 674 பேர் பலி

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share

பிரேசிலியா : கொரோனா பாதிப்பு அதிகரித்து பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 674 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேசிலில் நோய் தொற்று அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 674 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 2,54,220 ஆக அதிகரித்தது. பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பிரேசில் 4 வது இடத்தில் உள்ளது.


latest tamil news



நோய் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ பாதிப்புகளை மிக அலட்சியமாக கையாண்டு வருகிறார் என விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார்.


latest tamil news



இந்த நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிபர் போல்சனாரோவுக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X