தொழிலாளர் விஷயத்தில் அரசியல்: உ.பி.,அரசு மீது குற்றச்சாட்டு

Updated : மே 21, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி :புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் விவகாரத்தில், உத்தர பிரதேச மாநில அரசு அரசியல் செய்வதாக, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.உ.பி.,யில், முதல் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசுக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, கடந்த சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் கூறப்பட்டிருந்ததாவது:டில்லி - - உ.பி.,
தொழிலாளர் விஷயம் அரசியல் வேண்டாம் : உ.பி., அரசு மீது குற்றச்சாட்டு

புதுடில்லி :புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் விவகாரத்தில், உத்தர பிரதேச மாநில அரசு அரசியல் செய்வதாக, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.,யில், முதல் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசுக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, கடந்த சனிக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது:

டில்லி - - உ.பி., எல்லையில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம். காசியாபாதில் உள்ள காசிப்பூர் எல்லையில் இருந்து, 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து, 500 பஸ்களையும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் காங்கிரஸ் கட்சி ஏற்கும். இதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பிரியங்காவின் கடிதத்தை பரிசீலித்த மாநில அரசு, 1,000 பஸ்களை இயக்க, நேற்று முன் தினம் இரவு, அனுமதி அளித்தது. ஆனால், 1,000 பஸ்களின் ஆவணங்கள், தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், அனைத்து பஸ்களும், நேற்று காலை, 10:00 மணிக்குள், லக்னோவில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

இதற்கு, பிரியங்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பிரியங்கா சார்பில், அவரது தனி செயலர் சந்தீப் சிங், உ.பி., மாநில அரசுக்கு, நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் ஊரை நோக்கி சாலைகளில் குடும்பத்துடன் நடந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாநில எல்லையில் உள்ள முகாம்களில் காத்து கிடக்கின்றனர். இந்த நேரத்தில், 1,000 காலி பஸ்களை, லக்னோவுக்கு அனுப்புமாறு கூறுவது, நேர விரயம் மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற செயல்.

இந்த நெருக்கடியான நேரத்தில், இப்படி கேட்பது, மாநில அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநில அரசு கேட்டுக் கொண்ட படி, பஸ்களின் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆவணங்களை, சரி பார்க்கும் பணி, நேற்று நடந்தது. அப்போது, பஸ்கள் என கூறி, 'டெம்போ' சரக்கு வாகனங்கள், 'ஆட்டோ' மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக, மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்தார்.''குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது, காங்., தலைவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவே அவர்கள் விரும்புகின்றனர்,'' என்று அவர் குற்றம் சாட்டினார்.Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
20-மே-202023:31:38 IST Report Abuse
unmaitamil UP Govt filed FIR on this Duper Priyanka's Secretary and UP Congress President for providing wrong information to Govt and fooling the public with wrong promises.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
20-மே-202020:36:26 IST Report Abuse
sankaranarayanan kutramum seythuvittu kuraiyum kooruvathu nallatalla. madiyil kanamirunthaalthaan vazhyil payam. மாநில அரசு கேட்டுக் கொண்ட படி, பஸ்களின் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்taal entha perachchanaiyum illai. ஆவணங்களை, சரி பார்க்கும் பணி, நேற்று நடந்தது. அப்போது, பஸ்கள் என கூறி, 'டெம்போ' சரக்கு வாகனங்கள், 'ஆட்டோ' மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆவணங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக pkaar eZhunthullathu. marukkamudiyumaa penmaniye ithuthaan unnudaiya liilaikal.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-மே-202019:16:36 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த செய்தி இன்று உபி.யில் அனைத்து ஹிந்தி தினசரிகளிலும் வந்து காங்கிரஸ் மானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X