சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நானா ஊறுகாய்?

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நானா ஊறுகாய்?

நானா ஊறுகாய்?

'அமைச்சர்களை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது, சவாலான விஷயமாக இருக்கிறதே' என, எரிச்சலுடன் கூறுகிறார், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங். பஞ்சாப் தலைமைச் செயலராக இருப்பவர் கரன் அவதார் சிங். அமரீந்தர் சிங் என்ன கூறினாலும், அதை உடனடியாக செயல்படுத்தி, அவரிடம் நல்ல பெயர் வாங்கும் அதிகாரி இவர். ஆனால், அமரீந்தர் சிங் அரசில் உள்ள சில மூத்த அமைச்சர்களுக்கும், அவதார் சிங்கிற்கும் ஏழாம் பொருத்தம் தான். 'முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, சட்டவிரோத தொழில்களில் அவதார் சிங் ஈடுபடுகிறார்' என, அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். அவதார் சிங், இவர்களை பொருட்படுத்தவில்லை.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில், அவதார் சிங் அமர்ந்திருந்ததை பார்த்து, கடும் கோபம் அடைந்த மூன்று அமைச்சர்கள், 'தலைமைச் செயலர் வெளியேறினால் தான், நாங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்போம்' என, அடம் பிடித்தனர். வேறு வழியின்றி, தலைமைச் செயலர் வெளியேறினார். இந்த சம்பவம், அமரீந்தர் சிங்கிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. 'இவர்களிடம் காலம் தள்ளுவதே பெரிய வேலையாக இருக்கும் போலிருக்கிறதே... அவர்களது கவுரவ பிரச்னைக்கு, என்னை ஊறுகாயாக பயன்படுத்துகின்றனரே' என, புலம்புகிறார் அவர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
20-மே-202008:14:17 IST Report Abuse
Subramanian Narayanaswamy ivargal pesuvadhu seivathu yellam nagarigama yena oru nimidam yosithu parkattum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X