சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்: பொதுத்தளத்தில் ஒரு பெண்ணை, தன் தாய், சகோதரி ஆகியோருக்கு சமமாக மதித்து போற்றுவதற்கு பதிலாக, அநாகரிக வார்த்தைகளால், நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்வது, விமர்சனம் செய்பவரின் தரத்தைக் குறைக்குமே அன்றி, விமர்சிக்கப்படுபவரை தரம் தாழ்த்தி விடாது.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது, 'டிவி' விவாதம் ஒன்றில், காங்., பெண் எம்.பி., ஒருவருக்கும், பா.ஜ., பிரமுகர் ஒருவருக்கும் இடையே நடந்த மோதலை பற்றி தான் என்பது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிகிறது. அதே நேரத்தில், இந்த அறிவுரை, பலரால், பல சூழ்நிலைகளில், கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் கூறப்பட்டு வந்துள்ளது என்பதிலும், டவுட் இருக்க முடியாது!பத்திரிகை செய்தி:
தமிழக உயர் கல்வித்துறை சார்பிலான, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, ஜூன், 22ல் துவங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஜூலையில் கவுன்சிலிங் நடத்தி, ஆகஸ்ட்டில் வகுப்புகள் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, கவுன்சிலிங், ஆகஸ்ட்டில் நடக்கிறது. அதற்கு முன், ஜூன், 22 முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகளை துவங்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
'டவுட்' தனபாலு: பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது போலத் தான், உயர் கல்வித்துறையும் இவ்வாறு திட்டமிட்டுள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளுக்கு பயந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள், 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது போல, இன்ஜி., கவுன்சிலிங்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தள்ளி வைக்கப்படுமோ என்ற, 'டவுட்' வருது!நாம் தமிழர் என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:
'வட மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசுவோர், அவர்களின் மூட்டை, முடிச்சுகளை துாக்கியபடி நடக்க வேண்டியது தானே' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இந்த பேச்சு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஆணவம் அழியும் நாள் தொலைவில் இல்லை!

'டவுட்' தனபாலு: நிர்மலா சீதாராமன் சொன்னது, வெறுமனே, மத்திய அரசை கேள்விகள் கேட்கும், காங்., முன்னாள் தலைவர் ராகுலை பற்றி மட்டும் தான். இரண்டு மாதங்களாக, வட மாநில தொழிலாளர்களுக்கு, ஒரு உதவியும் செய்யாமல், அவர்களின் பரிதாபமான படங்களை மட்டும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் அவர், இது தான், பல ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ள, காங்., கட்சிக்கு அழகோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
20-மே-202016:12:15 IST Report Abuse
Suppan Mr. Thirunavukkarasar. be careful with your friendly party.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-மே-202011:42:28 IST Report Abuse
கல்யாணராமன் சு. வீராப்பு பேசற சீமான் புலம் பெயரும் விருந்தினர்களுக்கோ, அல்லது இங்கே துன்பப்படும் மக்களுக்கு என்ன செய்தார் (தனியாகவோ அல்லது கட்சி மூலமாகவோ) என்பதைத் எங்களுக்கு சந்தேகம் வராமல் விளக்குவாரா?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-மே-202011:40:50 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் கூறப்பட்டு வந்துள்ளது என்பதிலும், டவுட் இருக்க முடியாது...\\ .... அவ்வளவு பின்னாடி போகவேண்டாம்.... இந்த விவாதத்திலேயே, ஒரு பிரதமரை தரக்குறைவாக பேசியது எந்த வகையை சேர்ந்தது என்பது அரசர்தான் விளக்கவேண்டும் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X