சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 19, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்போ இனிமேல், 'டிவி' விவாதங்களில் பங்கேற்க செல்லும் உங்கள் கட்சியினர், அசிங்கமான வார்த்தைகள் அடங்கிய பட்டியல், பாதுகாப்புக்காக கவச உடை, அசிங்கமான பேச்சுகள் காதில் ஏறாத வகையில் காது சொருகி போன்றவற்றுடன் தான் செல்வரோ...' என, தடாலடியாக கேட்க வைக்கும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை:கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டு மட்டும் வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி, ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்ற பெயரில்,'டிவி'களில், பிரதமரை யாராவது இழிவாகப் பேசினால், அதே பாணியில் திருப்பி அடிக்க வேண்டும்.



'முதல்வர் அறிந்து இருப்பது போல் தான் தெரிகிறது. கொரோனா பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளதே... அதனால் தான், விமானங்களுக்கு தடை...' என, கூற வைக்கும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை:
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் விமானங்கள், தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் இருக்கும் தமிழர்கள், தமிழகம் திரும்ப, படும் துன்பங்களை முதல்வர் அறிவாரா?


'கோரிக்கை வருவதை பொறுத்து தானே, அரசு முடிவெடுக்கும். மக்களில் யாராவது, 'வழிபாட்டு தலங்களை திறங்க; சாமி கும்பிட வேண்டும்' என, கேட்டனரா...' என, எதிர்கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
வழிபாட்டு தலங்களை திறந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, கோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடையை திறந்து, கலர் கலராக, 'டோக்கன்' வழங்கி, குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்க, அரசால் முடிகிறது. வழிபாட்டு தலங்களை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பதா?


'அவசரமாக அறிக்கை விட்டால், இப்படித் தான். சென்னையில், இலவசமாக வழங்க, அமைச்சர் உத்தரவிட்டு விட்டார்...' என, மடக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
'அம்மா' உணவகங்களில், இலவச உணவு நிறுத்தப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுவது சரியானதல்ல. கொரோனாவின் பாதிப்பு குறையாத, சென்னை உள்ளிட்ட, 12 மாவட்டங்களிலாவது, இதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்ய வேண்டும்.


'நீங்க இப்படி சொல்றீங்க... ஆனால், இன்னமும் ஏக்கக் குரல்கள் அதிகமாக கேட்கின்றனவே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி:
தமிழக அரசு அறிவித்துள்ள, 1,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி, 519 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத தொழிலாளர்கள், ‍எட்டு லட்சத்து, 48 ஆயிரம் பேருக்கு, ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X