சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை!

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை!''அமைச்சருக்கே தெரியாம, அதிடியா டிரான்ஸ்பர்களை போடுறாங்க பா...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.நண்பர்களுக்கு சுக்கு காபி வழங்கியபடியே, ''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பால்வளத் துறை அமைச்சரான, ராஜேந்திர பாலாஜியின், விருதுநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலர் பதவியை பறிச்ச
 கொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை!

கொரோனா பெயரில் நடக்கும் வசூல் வேட்டை!

''அமைச்சருக்கே தெரியாம, அதிடியா டிரான்ஸ்பர்களை போடுறாங்க பா...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
நண்பர்களுக்கு சுக்கு காபி வழங்கியபடியே, ''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பால்வளத் துறை அமைச்சரான, ராஜேந்திர பாலாஜியின், விருதுநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலர் பதவியை பறிச்ச பிறகு, ஆவின் நிர்வாகத்துல, அதிரடி மாற்றங்கள் நடக்குது...
''கொரோனா பரபரப்புக்கு மத்தியிலயும், ஆவின்ல பொது மேலாளர், உதவி பொது மேலாளர், கண்காணிப்பாளர்னு பலரையும், இஷ்டத்துக்கு துாக்கியடிக்கிறாங்க பா...
''இப்படி, டிரான்ஸ்பர் போடப்பட்ட பலர், சென்னைக்கு போய், துறையின் உயர் அதிகாரியை பார்த்து முறையிட்டு, இடமாறுதலை ரத்து பண்ணியிருக்காங்க... பார்க்காதவங்க, வெளி மாவட்டங்களுக்கு பந்தாடப்படுறாங்க பா...
''இது, அமைச்சருக்கே தாமதமா தான் தெரிஞ்சிருக்கு... இது சம்பந்தமா, முதல்வரை பார்த்து, நியாயம் கேட்க, அமைச்சர் தரப்பு முடிவு பண்ணியிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஊரடங்கு நமக்கும் சேர்த்து தான்னு, நினைச்சுட்டாரோன்னு, புலம்புதாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்,
அண்ணாச்சி.''புலம்பறது யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தஞ்சையைச் சேர்ந்த, அ.தி.மு.க., ராஜ்யசபா,
எம்.பி.,யான வைத்திலிங்கம், ஊரடங்கு போட்டதுல இருந்து, வீட்டுக்குள்ளயே முடங்கிட்டாரு... 'உடல்நிலை பிரச்னையால தான், அண்ணன் வெளியில வரலை'ன்னு, அவரது ஆதரவாளர்கள் சொல்லிட்டு இருக்காவ வே...
''அதே நேரம், அம்மா உணவகத்துல, இலவச சாப்பாட்டுக்கான செலவை மட்டும், எம்.பி., ஏத்துக்கிட்டார்... மத்தபடி, அவரது ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை குடுத்துட்டு இருந்தாவ வே...
''அதையும், எம்.பி.,யை வச்சு குடுக்கலாம்னு பார்த்தா, அவர் வெளிய தலை காட்ட மாட்டேங்காரு... அதனால, ஆதரவாளர்களும் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிட்டாவ வே...'' என்றார்
அண்ணாச்சி.''கொரோனா பெயர்லயும் வசூல் வேட்டையை ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், குப்பண்ணா.''அடப்பாவமே... யாருங்க அது...''
எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பத்திரப்பதிவு துறை, ஏற்கனவே வசூலுக்கு பேர் பெற்ற துறை... பத்திரப் பதிவுக்காக பொதுமக்களிடமும், பதவி உயர்வு, இடமாறுதலுக்காக, துறைக்குள்ளயேயும் செமத்தியா வசூல் வேட்டை நடக்கும் ஓய்...
''இப்ப, கொரோனா நிவாரண பணிக்குன்னு காரணம் சொல்லிண்டு, ஒரு கும்பல், வசூல் வேட்டையை துவங்கிடுத்து... ''இதுக்காக, தலைமை அலுவலகத்துல இருக்கற ரெண்டு அதிகாரிகள், மண்டலங்களை பங்கு பிரிச்சு, ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், தலா, 50 ஆயிரத்துல துவங்கி, 3 லட்சம் ரூபாய் வரை, 'டார்கெட்' நிர்ணயித்து, வசூல் பண்ணிண்டு இருக்கா ஓய்...
''சில மாவட்ட பதிவாளர்கள், ஏஜன்ட் மாதிரி செயல்பட்டு, கலெக் ஷன் பண்ணி குடுத்துண்டு இருக்கா... ஏற்கனவே, சரியான அளவுல பத்திரப் பதிவுகள் நடக்காத சூழல்ல, இந்தத் தொகையை குடுக்க முடியாம, சார் பதிவாளர்கள் சிரமப்படறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடியவே, முற்றம் காலியானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - sennai ,இந்தியா
20-மே-202013:53:44 IST Report Abuse
A R J U N இந்தத் தொகையை குடுக்க முடியாம, சார் பதிவாளர்கள் சிரமப்படறா ஓய்...சொம்மா சொல்லாதீங்கோ..தினப்படி வரும்படியே கோடியில் இருக்க இன்னமுமா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X