காங்., பொது செயலாளர் பிரியங்கா தனி செயலர் கைது

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
லக்னோ:புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பஸ்களை இயக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பிரியங்கா தனி செயலாளர் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 1,000 பஸ்களில் அழைத்து வர உள்ளதாகவும் அதற்கு அனுமதிக்க

லக்னோ:புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பஸ்களை இயக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பிரியங்கா தனி செயலாளர் கைது செய்யப்பட்டார்.latest tamil news
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை 1,000 பஸ்களில் அழைத்து வர உள்ளதாகவும் அதற்கு அனுமதிக்க வேண்டியும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் கடிதத்தில் பஸ்களின் விபரம் மற்றும் டிரைவர்களி்ன் உடல் நல சான்று வழங்கும்படி கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவ்னிஷ் அவஸ்தி காந்தி குறிப்பிடிருந்தார்.

இதனிடையே பஸ்களை ஆக்ரா நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறி உ.பி., மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய்குமார் லல்லு உஞ்சாநங்லா பகுதியில் கைது செய்யப்பட்டார்,தொடர்ந்து ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் பிரியங்காவின் தனி செயலாளர் சந்தீப்சிங் உள்ளிட்டோர் மீது எப்.ஐ., ஆர் பதிவு செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்ரா எஸ்.பி., ரவிக்குமார் இது குறித்து கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் இயக்கத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதற்கு விண்ணப்பிக்கவில்லை . இதன்காரணமாக அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என கூறினார்.


latest tamil news
இதனிடையே காங்., நடவடிக்கையை குறை கூறி உள்ள மாநில பா.ஜ., தெரிவித்து இருப்பதாவது: காங்கிரஸ் கட்சி அளித்துள்ள பஸ்களின் விவரம் குறித்த பட்டியலில் ஆட்டோ டிராக்டர்களின் உள்ளி்ட்ட வாகனங்களின் விவரங்கள் கூட உள்ளன என கூறி உள்ளது.

மேலும் உ.பி., மாநில அரசின் வாகன தணிக்கை அறிக்கையில் கூறி இருப்பதாவது:79 வாகனங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து உள்ளதாகவும் 140 வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. 78 வாகனங்களுக்கு ஆயுட்காலம் மற்றும் இன்சூரன்ஸ் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
26-மே-202018:03:18 IST Report Abuse
unmaitamil மொதல்ல ஆயிரம் நல்ல நிலையில் ஓடக்கூடிய பஸ்களையும், புஸ்சுக்கான ஆவணங்களையம் ஏற்பாடுசெய். பிறகு தகுதியுள்ள நீண்டதூரம் ஓட்டக்கூடிய திறமையான ஆயிரம் ஓட்டுனரை ஏற்பாடுசெய். வழியில் வாகனத்திக்கோ, பிரயாணிகளுக்கோ ஏதாவது நேர்ந்தால் அரசுதான் காரணம். ஏன் அனுமதி கொடுக்குமுன் ஆவணங்களையும், பஸ், ஓட்டுநர் கண்டிஷன்களையும் பார்க்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ஒருகோடி, அரசு வேலை என்ற பல நாடகங்களை அரசு கண்டுள்ளது. அதனால் உண்மையாக மக்களுக்கு உதவ நினைத்தால் மேற்கூறிய காரியங்களை கான்கிராஸ் செய்யட்டும். வெட்டி நாடகம் வேண்டாம். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-மே-202001:17:35 IST Report Abuse
Rafi பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையிலும் யாரும் உதவிகள் செய்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202016:36:47 IST Report Abuse
Tamilnesan நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. நேரடியாகவே யோகிஜியை பார்த்து கேக்கறேன். அரசியல் நடத்துறீங்களா. இல்லை அராஜகம் நடத்துறீங்களா. அப்படி என்ன பண்ணாங்க எங்க கட்சி தலைவி. ஒரு விளம்பரத்துக்காக ஆயிரம் பஸ் அனுப்பறேன்னு ஒரு பொய்யை சொன்னாங்க. நீங்க ஒரு வழக்கமான அரசியல்வாதியா இருந்தா என்ன செஞ்சிருக்கணும். உடனே அவங்களை வாழ்த்தி ஒரு அறிக்கை குடுத்துட்டு, தனியா கூப்பிட்டு, “உன்னோட பித்தலாட்டத்தை நான் கண்டுக்க மாட்டேன். என்னோட ஊழலை நீ கண்டுக்காதே”ன்னு ஒரு அக்ரீமென்ட் போட்டிருக்கணும். அது தானேய்யா உலக வழக்கம். இந்நேரம் மாயவதியோ அகிலேஷோ முதல்வரா இருந்தா அதை தானே செஞ்சிருப்பாங்க? நீங்க என்னடான்னா உடனே பஸ் நம்பரை குடு, டிரைவர் அட்ரசை குடுன்னு கேட்டு அவங்களை கதற வெச்சிருக்கீங்க. சரி ஏதோ கஷ்டப்பட்டு அதை ரெடி பண்ணி குடுத்தா அவங்களை பாராட்டாம, உடனே அதை செக் பண்ணி டுபாகூர்ன்னு கண்டுபுடிச்சு மீடியா கிட்ட வேற குடுத்திருகீங்க. இப்படி ஆப்பு மேல ஆப்பு வெச்சுகிட்டே இருந்தா நாங்க எப்படி கான்-கிரஸ் கட்சியை நடத்தறது? காண்டி பேமிலி புகழை எப்படி மெயின்டைன் பண்றது. நாங்க என்ன உங்களை மாதிரி 300 சீட்டு ஜெயிச்சு ஆட்சியை புடிக்கணம்ன்னா ஆசைப்படறோம்?. ஏதோ அடுத்த தேர்தல்ல ஜனங்களை ஏமாத்தி ஒரு 54 சீட்டாவது ஜெயிச்சு, எங்க பப்புவை கௌரவமா எதிர் கட்சி தலைவர் பதவியிலேயாவது உட்கார வைக்கலாம்ன்னு பார்த்தா அதுக்கும் இப்படி கேட் போட்டா நாங்க என்ன தான் பண்றது? வேண்டாம் எங்களுக்கும் தெரியும் நேர்மையான அரசியலு. ஆனால் செய்ய மாட்டோம். செய்ய தெரியாது. கடைசியா உங்களை எச்சரிக்கிறேன். நீங்க தொடர்ந்து இப்படியே எங்களை அழ வச்சீங்கன்னா உடனடியா பப்புவுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு, அடுத்த காண்டியை நாட்டுக்கு அர்பணிக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X