பொது செய்தி

தமிழ்நாடு

மே 25க்குள் கோயில்களை வழிபாட்டிற்கு திறக்க இந்துமுன்னணி கோரிக்கை

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் கோயில்களை மே 25ல் வழிபாட்டிற்கு திறக்காவிட்டால் 26ல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கோயில்கள் இன்னமும் வழிபாட்டிற்கு திறக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் நடப்பதாக அரசு தெரிவித்தது. இருப்பினும் கோயிலில் காலை நேரத்தில் தேவாரம், திருவாசகம்,

திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் கோயில்களை மே 25ல் வழிபாட்டிற்கு திறக்காவிட்டால் 26ல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்தார்.latest tamil newsதமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கோயில்கள் இன்னமும் வழிபாட்டிற்கு திறக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் நடப்பதாக அரசு தெரிவித்தது. இருப்பினும் கோயிலில் காலை நேரத்தில் தேவாரம், திருவாசகம், ஆன்மிக பாடல்களை ஒலிபரப்பவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து நேற்று மாலையில் நெல்லையப்பர் கோயில் முன்பாக இந்துமுன்னணியினர் முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று காலையில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதனிடையே நேற்று இந்துமுன்னணியில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பாக கூடினர்.


latest tamil newsமாவட்டம் முழுவதிலும் இருந்து 53 கோயில்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்துமுன்னணி மாநிலதுணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாநில செயலாளர் குற்றாலநாதன், கோட்டத்தலைவர் தங்க மனோகர், கோட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் பிரமநாயகம், மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் பங்கேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.

திருக்கோயில்களில் கூழ் காய்ச்சி வழங்க அனுமதி கோரினர். இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், மார்ச் 25க்குள் கோயில்களை பக்தர்களின் வழிபாட்டிற்கு திறந்துவிட கோரிக்கை வைக்கிறோம்.திறக்காவிட்டால் மே 26ல் தமிழகம் முழுவதும் கோயில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202007:09:15 IST Report Abuse
ஆப்பு ஏன்? கைதட்டி வெளக்கேத்தி கொரோனாவை விரட்டியாச்சா?
Rate this:
Cancel
20-மே-202006:24:51 IST Report Abuse
SAINATH Paramasivan ஐயா முதலில் திருக்கோயில் உள்ள மடப்பள்ளி திறந்து வைத்திருக்கும் அன்னதான சாலைகளில் உணவுகளை தயாரித்து ஏழை எளியவர்கள் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் பிறகு வழிபாட்டிற்கு பக்தர்களை அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
20-மே-202014:13:31 IST Report Abuse
தமிழ்வேள்திருக்கோவில் மடப்பள்ளிகளில், இஷ்டத்துக்கு சமையல் வேலைகளை மேற்கொள்ள இயலாது.. வழிபாடு சார்ந்த /அந்தந்த கோவில் அனுஷ்டானம் சார்ந்த நைவேத்யங்கள் மட்டுமே உரியவர்க்ளால், உரிய நியமங்களுடன் மட்டுமே மேற்கொள்ள இயலும். அன்னதானத்துக்கான உணவுகள் கூட கோவில் மடைப்பள்ளிகளில் தயாரிக்கப்படுவதில்லை... தனியாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. கோவில் மடைப்பள்ளிகளை பயன்படுத்தினார், தடை செய்யப்பட்ட உணவு வகைகள் சமைக்கும்படி கேட்பார்கள். அவை செய்ய இயலாதவை..மேலும், மடைப்பள்ளிகளில், கணபதி, விஷ்வக்சேனர்,அன்னபூரணி மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்[ குறிப்பிட்ட கோவில் ஐதீகப்படி அவர்களின் மேற் பார்வையில் பிர்சாதங்கள் செய்யப்படுவதாக அமையும்.. இதனை மத நம்பிக்கையற்றோர், பிற மத பயனாளிகள் ஏற்க மாட்டார்கள்..அவர்களுக்காக அந்த பிரதிஷ்டைகளை மறுப்பதோ, வேறுவிதமாக சமைப்பதோ ஐதீக விரோதம்..ஏற்க இயலாதது..எனவே மடைப்பள்ளீகள், பொது உணவு விநியோக சமையல்க்கு ஒத்து வராது.....[வெங்காயம், பூண்டு, மசாலா வகைகள், மற்றும், விலக்கப்பட்ட காய்கறிகள் சமைப்பது கோவில்களீல் இல்லை. பொது உணவு வகைகள் இவை இன்றி சமைக்க இயலாது]...
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
20-மே-202004:26:04 IST Report Abuse
Ray ஊரடங்கில் சமூக இடைவெளி விட்டு உலாவுவதில் அப்படி என்ன கஷ்டமோ தெரிய வில்லை வரிசையில் நிற்கவும் வட்டம் போட்டு காட்ட வேண்டிய அளவுக்கா நாம் சுயபுத்தி இல்லாதவர்கள்? சாலையில் செல்லும்போதும் மேலே வந்து உரசுவது போலத்தான் மெத்தப் படித்தவர்களும் நடந்து கொள்கிறார்கள் கடைகளில் நான் முந்தி நீ முந்தின்னு தள்ளுமுள்ளு ஏனோ சுயநலத்தின் வெளிப்பாடு எனவே ஊரடங்கு இன்னும் கொஞ்சநாள் நீடிக்கட்டும் சின்னக் குழந்தைகளுக்குத்தான் சொப்பு மணி சட்டம் தேவை எங்கிருந்தாலும் நம்மால் ஈசனை மனக்கண்ணில் தரிசிக்க இயலும் அதற்கு தேவை முழுமையான இறைஞானம் பக்தி அவ்வளவே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X