பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் அமையுது சூரிய சக்தி மின் நிலையங்கள்

Added : மே 19, 2020
Share
Advertisement

சென்னை : தமிழக அரசின், பல்வேறு துறை அலுவலகங்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், அடுத்த வாரம் துவக்க உள்ளது.

வீடுகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவன கட்டடங்களில், குறைந்த திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும், அந்த மின் நிலையங்கள் அமைக்க, 'டெடா' எனப்படும், தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்தது. இதற்காக, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களில், தலா, 10 கிலோ வாட் முதல், அதிகபட்சம், 500 கிலோ வாட் வரை என, மொத்தம், 50 மெகா வாட் அளவுக்கு, சூரியசக்தி மின் நிலையங்களை, எனர்ஜி எபிஷியன்சி தன் சொந்த செலவில் அமைக்கும்.

அந்நிறுவனத்திற்கு, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, 4.58 ரூபாய் என, 25 ஆண்டுகளுக்கு, டெடா பணம் வழங்கும்.சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனம்; நாகையில் உள்ள மீன்வள பல்கலை போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம் ஏற்கனவே துவக்கியது. ஆனால், கொரோனா ஊரடங்கால், அந்தப் பணிகள் தடைபட்டன. அத்துடன், மற்ற அரசு துறை அலுவலகங்களில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதும் தடைபட்டது.எனவே, தடைபட்ட பணிகளை, அடுத்த வாரம் முதல் துவக்க, எனர்ஜி எபிஷியன்சி முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X