ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 57 பேருக்கு கொரோனா

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டி செல்கிறது. இது தொடர்பாக இன்று (மே.,19) அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்ததாவது : ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் ( 9.00 am -9.00 am ) 57 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கர்னூல் மற்றும் சித்தூரில் மேலும் 2 பேர் பலியாகினர். மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,339 ஆக அதிகரித்தது. ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 50 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9,739 பேருக்கு நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 1536 பேர் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தனர். தற்போது 691 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளில் 150 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X