ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சுட்டுக் கொலை| Dinamalar

'ஹிஸ்புல் முஜாஹிதீன்' தளபதி சுட்டுக் கொலை

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share

ஸ்ரீநகர் : ஜம்மு -- காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், 'ஹிஸ்புல் முஜாஹிதீன்' பயங்கரவாத அமைப்பின், உயர்மட்ட தளபதி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு -- காஷ்மீரின் ஸ்ரீநகரை அடுத்த நவகாடல் பகுதியில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் துவங்கிய தாக்குதல், ஐந்து மணி நேரம் வரை நீடித்தது.இதில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், அவர்களில் ஒருவர், ஸ்ரீநகரைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் உயர்மட்ட தளபதி என்பதுடன், மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகளின் எதிர் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் காயமடைந்தனர். இதற்கிடையே, ஜம்மு- - காஷ்மீரின் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாக்., ராணுவத்தினர், நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தியதுடன், குண்டு வீச்சிலும் ஈடுபட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, 12 மணி நேரத்திற்குள், பாக்., ராணுவத்தினர் இரு முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக, ராணுவ அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X