குணமாண கர்ப்பிணிக்கு மீண்டும் கொரோனா

Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மலப்புரம் : குவைத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, இந்தியா திரும்பிய கர்ப்பிணி ஒருவர், மீண்டும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த, 34 வயது பெண், குவைத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். ஒன்பது மாத கர்ப்பிணியான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் குணமடைந்தார். இந்நிலையில், குவைத்தில்

மலப்புரம் : குவைத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து, இந்தியா திரும்பிய கர்ப்பிணி ஒருவர், மீண்டும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த, 34 வயது பெண், குவைத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். ஒன்பது மாத கர்ப்பிணியான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் குணமடைந்தார். இந்நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, மத்திய அரசு அனுப்பிய விமானம் மூலம், அவர் கேரளா திரும்பினார்.விமான நிலையத்தில், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த விபரத்தை தெரிவித்தார். உடனே அதிகாரிகள், அவரை மஞ்சேரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனிமைப்படுத்தி வைத்தனர்.

இந்நிலையில், பரிசோதனை முடிவில், அந்த பெண்ணுக்கு, மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில், கொரோனா தாக்கி குணமான ஒருவரை, மீண்டும் வைரஸ் தாக்குவது, இது தான் முதல் முறை என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
20-மே-202007:23:22 IST Report Abuse
வாய்மையே வெல்லும் keralam is punya boomi.. surely Garbini will be coming out of Corona.. good job by Kerala CM Pinarayi sir in attacking Corona deadly virus
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X