பொது செய்தி

இந்தியா

சவுதியிலிருந்து கொச்சி வந்த 143 இந்தியர்கள்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொச்சி: வந்தே பாரத் மிஷனில் சவுதியின் தமாம் நகரிலிருந்து 143 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே
Vande Bharat Mission, Air India, special flight, Dammam, Saudi Arabia, Cochin International Airport, 143 passengers, Kerala

கொச்சி: வந்தே பாரத் மிஷனில் சவுதியின் தமாம் நகரிலிருந்து 143 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், சவுதி அரேபியாவின் தமாம் நகரிலிருந்து, 143 பேர், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மே-202002:29:14 IST Report Abuse
மலரின் மகள் ///வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது/// அப்படியா? எதற்கு மீட்க வேண்டும் அதற்கான சிக்கல்கள் என்ன? விமானம் வந்திறங்குவதற்கு தடையில்லை என்று சொன்னால் தாராளமாக விமானங்கள் மூலம் அனைவரும் வரலாம். ஒரு சிக்கலும் இல்லை. யுத்தம் இயற்கை பேரிடர் என்று எது அவர்களின் வருகைக்கு சிக்கல் உருவாக்கியது. அரசால் உருவாக்கப்பட்ட அதீத கற்பனை பயத்தின் விளைவு தான் இது. தேவையற்ற தடைக்கற்கள். நாங்கள் அறிந்த வரையில் சவுதியின் விமானங்கள் இந்தியாவிற்கு வந்து கொச்சி, டில்லி மருத்துவம் சார்ந்த பணியாளர்களை அழைத்து செல்கிறது. காலியாக வருவதற்கு பதிலாக சரக்கு விமானமாக வந்து பயனியர்களை அழைத்து செல்கிறது. அவர்கள் தாராளமாக அங்கிருந்து வரும்போது இந்தியர்களை அழைத்து வந்து இங்கு விட்டு விட்டு இங்கிருந்து தொழிலாளர்களை அங்கே அழைத்து செல்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள். இந்திய அரசு தான் அனுமதி நல்க வில்லை என்கிறார்கள். அரசிடம் தேவையான தகவல்களோ அல்லது சரியாக திட்டமிடுதலோ இல்லை போலும் ஆகையால் என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக மிகவும் மெதுவாகவே அடி எடுத்து வைக்கிறார்கள் பொதுமக்கள் சேவை என்ற வகையில் வரும்போது. அதே சமயம் கார்பொரேட் நிறுவனங்களுக்கு முந்தியடித்து கொண்டு அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள் என்று தெரிகிறது செய்திகளையும் வாட்ஸாப்ப் தகவல்களையும் பார்க்கும் பொது. அரசு சாமானியர்களை முதலில் கவனிக்க வேண்டும். பிரியரிட்டி தருவதில் அரசு சரியாக செயல்படவில்லையோ என்று எண்ண தோன்றுகிறதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X