சவுதியிலிருந்து கொச்சி வந்த 143 இந்தியர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சவுதியிலிருந்து கொச்சி வந்த 143 இந்தியர்கள்

Updated : மே 19, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (1)
Share
Vande Bharat Mission, Air India, special flight, Dammam, Saudi Arabia, Cochin International Airport, 143 passengers, Kerala

கொச்சி: வந்தே பாரத் மிஷனில் சவுதியின் தமாம் நகரிலிருந்து 143 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், சவுதி அரேபியாவின் தமாம் நகரிலிருந்து, 143 பேர், ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X