பொது செய்தி

இந்தியா

20 ஆண்டுக்கு பின் ரூ.10 கோடி கிடைக்கும்!

Added : மே 19, 2020
Share
Advertisement

அதிக ஆட்கள் தேவைப்படாத, பராமரிப்பு செலவில்லாத, சந்தனம், செஞ்சந்தன மரங்களை சாகுபடி செய்யும், ஈரோட்டை சேர்ந்த விவசாயி தங்கவேல்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, மூணாம்பள்ளி தான் சொந்த ஊர்.பெருந்துறை -- கோயம்புத்துார் புறவழிச்சாலை அருகே, பண்ணை வீட்டில் வசிக்கிறோம்.சொந்த தொழிலில் லாபம் இல்லாததால், 2010க்கு பிறகு, விவசாயம் பார்க்க வந்து விட்டேன். பருவ மழை இல்லை. கூலி ஆள் பிரச்னையால், சாதாரண விவசாயம் செய்யத் தோணவில்லை. ஏதாவது வித்தியாசமாக செய்யலாம்னு நினைச்சப்போ தான், சந்தன மரம் நடும் யோசனை வந்துச்சு.

அந்தச் சமயத்துல, கோயம்புத்துார், 'கொடிசியா'வில் நடந்த விவசாயக் கண்காட்சியில், சந்தன மர ஸ்டால் போட்டிருந்தாங்க; அங்கே முழுத் தகவலும் தெரிஞ்சுகிட்டேன். பிறகு, ராசிபுரம் போய், சந்தன மரம் வளர்க்கிறது சம்பந்தமா, முழுசா தெரிஞ்சுகிட்டேன்.மேலும், பெருந்துறையில எங்கள் வீட்டுல சந்தன மரம், செம்மரம், மாமரம் இருக்கு. அதுவும் நல்லா வளர்ந்திருந்துச்சு. அதனால், தைரியமாக, சந்தன மர வளர்ப்பில் இறங்கிட்டேன். கடந்த, 2010ல், பழநி மலை வன அபிவிருத்திக் கழகத்துல, ஒரு கன்று, 15 ரூபாய் விலைக்கு, 1,200 கன்றுகளை வாங்கி, ௪ ஏக்கரில் நடவு செய்தோம்.நடவு செய்த விபரத்தை, கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்து, இத்தனை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கோம்னு தகவல் சொல்லி, அதற்கான அடங்கலையும், வாங்கி வெச்சுக்கிட்டேன்.

இன்னைக்கு எங்க தோட்டத்துல, ஒரு ஆள் உயரத்துக்கு மேல சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன.சந்தனம், செம்மரம் ரெண்டிலும் உடனடியாக வருமானம் கிடைக்காது. 1,200 சந்தன மரம் நட்டதுல இப்போ 1,000 மரங்கள் தான் இருக்கு. 30 வருஷத்துக்குப் பிறகு தான், சந்தன மரம் வாசம் வீசும்; அதற்கு மதிப்பும் கிடைக்கும். சந்தன மரத்துக்குள்ள இருக்கிற கட்டைக்குத் தான் மதிப்பு. ஒரு மரத்துல குறைந்தபட்சம், 8 கிலோ கட்டை கிடைக்கும்.அந்த வகையில், என் நிலத்துல இருந்து குறைந்தபட்சம், 7,500 கிலோ சந்தனக் கட்டை கிடைக்கும். இன்னைக்கு, சந்தனக் கட்டையோட விலை, 1 கிலோ, 14 ஆயிரம் ரூபாய். இன்னும், 20 வருஷம் கழிச்சு, இதே விலைக்கு விற்றாலும் கூட, குறைஞ்சது, 10 கோடி ரூபாய் கிடைக்கும்.

வனத்துறையினர் தான் சந்தன மரத்தை அறுத்து, 'டெண்டர்' விட்டு, விற்பனை செய்து தருவாங்க. அதற்காக அவர்கள், 20 சதவீத நிர்வாகச் செலவு எடுத்துக்குவாங்க. மீதி, 80 சதவீதம் நம்மகிட்ட கொடுப்பாங்க.அந்த நேரத்தில் எப்படியும், 8 கோடி ரூபாய் வரும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X