அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்ன செய்ய போகிறார் முதல்வர்? ஸ்டாலின் கேள்வி

Added : மே 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 என்ன செய்ய போகிறார் முதல்வர்?  ஸ்டாலின் கேள்வி

சென்னை : 'தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகளின், இலவச மின்சார திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சார திட்டத்தையோ ரத்து செய்ய, அ.தி.மு.க., அரசு, எந்த சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் ஒப்புக் கொள்ளக் கூடாது.'மாநில அரசுகளுக்கு, கொரோனா கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை, உடனே திரும்ப பெற வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., ஏதோ ஒப்புக்காக கடிதம் மட்டும் எழுதி விட்டு நின்று விடக்கூடாது.

அதற்குரிய அழுத்தம் கொடுத்து, தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க வேண்டும்.மத்திய அரசை பகைத்தால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பரோ என பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல், அவர்களுடைய பேராதிக்க போக்கை எதிர்க்க வேண்டும்; என்ன செய்யப் போகிறார் முதல்வர் என்பதை, அறிந்து கொள்ள காத்திருக்கிறது தமிழகம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காலத்தில், முறையான ஆலோசனையின்றி, தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட, 10ம் வகுப்பு தேர்வை, எதிர்ப்பு பலமானதும் தள்ளி வைத்துள்ளனர்.இப்போதும் குழப்பம் தான். அதற்குள் நிலைமை சீராகி விடுமா?மாணவர்களும், பெற்றோரும் பதறாத வகையில், திட்டத்தை அறிவிக்க வேண்டியது, அரசின் கடமை.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க., தலைமை அறிக்கை:கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் அந்தமான் மாநிலங்களைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரனஸ்' வாயிலாக, ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அந்த மாநிலங்களில், ஊரடங்கு காலத்தில், தி.மு.க.,வினர் ஆற்றி வரும் உதவி பணிகள் குறித்து விசாரித்தார். இந்த உரையாடலின் போது, 'வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும், தமிழக தொழிலாளர்களை அழைத்து வர, தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை' என, பிற மாநில நிர்வாகிகள், ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. நிவாரண உதவிஸ்டாலின் உத்தரவின்படி, கடலுார் கிழக்கு மாவட்ட செயலர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி, சிதம்பரம் நகரில் வசிக்கும், 200 இசை வேளாளர் குடும்பங்களுக்கு, காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்களை, நகர செயலர், கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
20-மே-202014:34:18 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் மாநில உரிமை என்பது அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்(உரிமை). இங்குள்ள கட்சிகள் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசினால் சில ARIVALINGAL இங்குள்ள ஊழலை தடுப்பதற்காக மத்திய அரசு அவ்வாறு செய்கிறது என்று வாதிடுகிறார்கள் .ஊழல் நடந்தால் ஊழல் செய்தவர்களை தண்டிக்கலாம்,அதைவிட்டு உரிமைகளை பறித்தால் மூளைச்சாவு அடைந்த உடம்பு போல் மாநிலம் ஆகிவிடும்.(காங்கிரஸ் படிப்படியாக பறித்தது பாஜக வேகமாக பறிக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்)
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
20-மே-202012:38:26 IST Report Abuse
Nallavan Nallavan மாநிலங்களின் வருவாயை நம்பி தான் மத்திய அரசாங்கம் உள்ளது. இந்நிலையில், மாநிலங்களின் மொத்த வருமானத்தையும், அதிகாரத்தையும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ள முயலுவது எந்த விதத்திலும் நியாயமா இல்லை. மாநில முதல்வர்கள் ஒன்றாக இனைந்து தங்களின் வரம்புகளை காக்க வேண்டும். அதற்கு திறமையாக, தெம்பான, ரோஷமுள்ள, தங்களின் சொத்துக்களை மட்டும் காப்பதே என்று இல்லது உள்ள முதல்வர்கள் தான் உண்மையான மாநிலத்தின் தலைவர்களாக கருத படுவார்கள்.
Rate this:
Cancel
GG.RAJA - chennai,இந்தியா
20-மே-202009:57:31 IST Report Abuse
GG.RAJA விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படாது. தேவையில்லாமல் நானுமிருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிராமல் தலித்துகளை இழிவாகப் பேசிய தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கும் வேலையை ஸ்டாலின் கவனிக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X