என்ன செய்ய போகிறார் முதல்வர்? ஸ்டாலின் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்ன செய்ய போகிறார் முதல்வர்? ஸ்டாலின் கேள்வி

Added : மே 19, 2020 | கருத்துகள் (5)
Share
 என்ன செய்ய போகிறார் முதல்வர்?  ஸ்டாலின் கேள்வி

சென்னை : 'தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகளின், இலவச மின்சார திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சார திட்டத்தையோ ரத்து செய்ய, அ.தி.மு.க., அரசு, எந்த சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் ஒப்புக் கொள்ளக் கூடாது.'மாநில அரசுகளுக்கு, கொரோனா கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை, உடனே திரும்ப பெற வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., ஏதோ ஒப்புக்காக கடிதம் மட்டும் எழுதி விட்டு நின்று விடக்கூடாது.

அதற்குரிய அழுத்தம் கொடுத்து, தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க வேண்டும்.மத்திய அரசை பகைத்தால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பரோ என பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல், அவர்களுடைய பேராதிக்க போக்கை எதிர்க்க வேண்டும்; என்ன செய்யப் போகிறார் முதல்வர் என்பதை, அறிந்து கொள்ள காத்திருக்கிறது தமிழகம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காலத்தில், முறையான ஆலோசனையின்றி, தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட, 10ம் வகுப்பு தேர்வை, எதிர்ப்பு பலமானதும் தள்ளி வைத்துள்ளனர்.இப்போதும் குழப்பம் தான். அதற்குள் நிலைமை சீராகி விடுமா?மாணவர்களும், பெற்றோரும் பதறாத வகையில், திட்டத்தை அறிவிக்க வேண்டியது, அரசின் கடமை.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க., தலைமை அறிக்கை:கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் அந்தமான் மாநிலங்களைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரனஸ்' வாயிலாக, ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அந்த மாநிலங்களில், ஊரடங்கு காலத்தில், தி.மு.க.,வினர் ஆற்றி வரும் உதவி பணிகள் குறித்து விசாரித்தார். இந்த உரையாடலின் போது, 'வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும், தமிழக தொழிலாளர்களை அழைத்து வர, தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை' என, பிற மாநில நிர்வாகிகள், ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. நிவாரண உதவிஸ்டாலின் உத்தரவின்படி, கடலுார் கிழக்கு மாவட்ட செயலர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனையின்படி, சிதம்பரம் நகரில் வசிக்கும், 200 இசை வேளாளர் குடும்பங்களுக்கு, காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்களை, நகர செயலர், கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X