பாலஸ்தீன அகதிகள் நல்வாழ்வுக்கு ரூ.15 கோடி இந்தியா நிதியுதவி

Added : மே 19, 2020
Share
Advertisement

ரமல்லா : பாலஸ்தீன அகதிகளின் நல்வாழ்வுக்கு பாடுபடும் ஐ.நா., முகமைக்கு, இந்தியா, 15 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஐ.நா.,நிவாரணம் மற்றும் பணி முகமையான, யு.என்.ஆர்.டபிள்யு.ஏ., அமைப்பு, பாலஸ்தீன அகதிகளின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு இந்தியா, 15 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ரமல்லாவில், பாலஸ்தீனத்திற்கான இந்திய பிரதிநிதி, சுனில் குமார், நிதியுதவி வழங்கி பேசும்போது, ''பாலஸ்தீன அகதிகள் மேம்பாட்டிற்கு, இந்த முகமை சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்தியாவின் நிதியுதவி, அகதிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்,'' என்றார்.

யு.என்.ஆர்.டபிள்யு.ஏ., நிதியுதவி பிரிவு தலைவர், மார்க் லசோவி பேசியதாவது: பாலஸ்தீன அகதிகள் முன்னேற்றத்திற்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. கொரோனா பிரச்னைக்கு இடையிலும், இந்தியா நிதியுதவி வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது. ஆண்டுக்காண்டு, இந்தியா நிதியுதவியை அதிகரித்து வருவதற்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.மேற்காசியாவில், மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை, ஐ.நா., தனி நாடாக அங்கீகரித்துள்ளது. யு.என்.ஆர்.டபிள்யு.ஏ., அமைப்பு, 31 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு, சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. ஆண்டு தோறும், 5.26 லட்சம் அகதிகள் கல்வி கற்கவும் உதவுகிறது.

இதற்கிடையே, பாலஸ்தீனத்தின், காசா பகுதியில், ஐந்து பள்ளிகள், செயற்கைக் கோள் மையம், அல் - குட்ஸ் பல்கலையில், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை அமைக்க, இந்தியா, 525 கோடி ரூபாய் நிதியுதவியை விரைவில் வழங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X