சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

சிறந்த தலைமைக்கான அடையாளம் இது!

Updated : மே 21, 2020 | Added : மே 19, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
நம் நாட்டின் தலைமைக்கு, சவால்களும், சோதனைகளும், பல வழிகளிலும் வருகின்றன. ஒரு பிரச்னை ஏற்பட்டால், அதை உடன் எதிர்கொள்வது தான் முக்கியம். கொரோனா பாதிப்பை உடன் கண்டுபிடிப்பது, மக்களை எச்சரிப்பது ஆகியவை தான், வைரஸ் தொற்றுக்கு எதிராக, பிரதமர் மோடி எடுத்த முதல் உறுதியான நடவடிக்கை. இந்தியா முன்னுதாரணம்இதுதான், இந்தியாவில், வைரஸ் மெதுவாக பரவியுள்ளதற்கு, பெரிதும்
சிறந்த தலைமைக்கான அடையாளம் இது!

நம் நாட்டின் தலைமைக்கு, சவால்களும், சோதனைகளும், பல வழிகளிலும் வருகின்றன. ஒரு பிரச்னை ஏற்பட்டால், அதை உடன் எதிர்கொள்வது தான் முக்கியம். கொரோனா பாதிப்பை உடன் கண்டுபிடிப்பது, மக்களை எச்சரிப்பது ஆகியவை தான், வைரஸ் தொற்றுக்கு எதிராக, பிரதமர் மோடி எடுத்த முதல் உறுதியான நடவடிக்கை.


இந்தியா முன்னுதாரணம்இதுதான், இந்தியாவில், வைரஸ் மெதுவாக பரவியுள்ளதற்கு, பெரிதும் உதவியுள்ளது. மற்ற நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாக திகழவும் உதவும். பெரும் பாதிப்பிலிருந்து நாட்டை காப்பாற்றிய, பிரதமரின் இந்த நடவடிக்கை, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.மிகவும் துன்பமான நேரங்களில் தான், மக்களின் உண்மையான குணமும், திறமையும் வெளிப்படும். இந்த வார்த்தை, தலைமைக்கும் பொருந்தும். சாதாரண நாட்களில், தலைமை வகிப்பது, பெரிய சவால் அல்ல. ஆனால், கடும் நெருக்கடியான நேரங்களில், சிறப்பாக செயல்படடு, தன்னை வேறுபடுத்தி காட்டுவது தான், சிறந்த தலைமைக்கான சவால். சர்வதேச அளவில், தலைமைக்கு வைத்த சோதனையாக, கொரோனா அமைந்து உள்ளது. இந்த சோதனையில், இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடியும், முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.வைரசுக்கு எதிராக, நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, உறுதியுடன் போராடி வருகிறது. அத்துடன், வைரஸ் பரவலுக்கு பிந்தைய காலத்தையும் பற்றி நினைத்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, தன் கால்களை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளது.'சுயசார்பு இந்தியா' என, பிரதமர் கூறியதையும், அதற்கு பின், ஐந்து நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும், இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக எப்போதும் நினைவுகூரப்படும்.


சீர்திருத்தம்இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் அனைத்து துறைகளிலும், பிரதமர், மோடியின், தொலை நோக்கு திட்டங்களால், பெரும் சீர்திருத்தம் அடைய உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கான ஓட்டுனர்களான, ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரின் நலனுக்காக, பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இலவச உணவு பொருட்கள், முத்ரா திட்ட பயனாளிகளுக்கு உதவி, கிராம வேலை வாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு' என, ஏழைகள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வளர்ச்சியின் முதுகெலும்பாகவும், வேலை வாய்ப்புகள் உருவாக்கும் இடமாகவும், சிறு, குழு மற்றும் நடுத்தர தொழில் துறைகள்
உள்ளன. இந்த தொழில்களுக்கு, சலுகை வட்டியில், 3 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 85 சதவீத மக்கள், விவசாயத்தை தான் சார்ந்துள்ளனர். விவசாயத்துறையில், விவசாயிகள் நலன் கருதி, பல சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள விவசாய பொருட்கள் கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பை உருவாக்குதல், குளிர்பதன கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, 1 லட்சம் கோடி ரூபாய், உடனடியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.


ஞாபக மறதிவிவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தம் மூலம், விவசாயிகள் தங்கள் பொருட்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க வழி ஏற்படும். நிலக்கரி, சுரங்கம், ராணுவம், விமான போக்குவரத்து, விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படி பிரதமர் எடுத்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை பலர் பாராட்டினாலும், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும், குறை கூறியுள்ளனர்.மக்கள் கைகளில் பணத்தை கொடுக்கவில்லை என, அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது.


நிவாரண திட்டங்கள்ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன், பிரதமர் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், காங்., தலைமையில் இருந்த ஐ.மு., கூட்டணி ஆட்சியில், அனைத்து திட்டங்களும், வெறும் அறவிப்புடன் நின்று விட்டதை, இவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மோடி அரசில்,வெறும் அறிவிப்புடன் நிற்காமல், 39 கோடிக்கும் அதிகமானோர், 35 கோடி ரூபாய்க்கு மேல், நிதியுதவி பெற்றுள்ளனர்.


விவசாய கடன்கள் தள்ளுபடிஇரண்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்கில், 2.000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான, 'ஜன்தன்' வங்கி கணக்குகளில், இரண்டு தவணையாக, தலா, 500 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு தலா, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு குடும்பத்துக்கு, தலா 1 கிலோ பருப்பு வழங்கப்பட்டு உள்ளன. யாருடைய குறுக்கீடும் இன்றி, இந்தப் பொருட்களை மக்கள் நேரிடையாக பெற்றுள்ளனர்.

சரியான வழியில், சரியான முடிவுகள் எடுப்பதில் தான் வெற்றிகள் அடங்கியுள்ளன. ஐ.மு.கூட்டணி ஆட்சியில், விவசாய கடன்கள் தள்ளுபடி என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பலனை விவசாயிகள் பெறவில்லை. மாறாக நாட்டின் பொருளாதாரம் தான் சீர்குலைந்தது. ஆனால், மோடி அரசின் நடவடிக்கைகள், மக்களை நேரிடையாக சென்றடைகின்றன. மொத்த மாநில உற்பத்தியில், மாநில அரசுகள் கடன் வாங்கும் சக்தியை, 3 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது, மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று. இதன் மூலம், மாநில அரசுகளுக்கு, 4 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இதை, மாநில அரசுகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. மின் துறையில் சீர்திருத்தம், தொழில் துவங்க சாதகமான நிலை, நகர உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் ஆகியவற்றை, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியவர்கள்தான், அரசு எடுத்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை குறை கூறுகின்றனர்.


அதிர்ஷ்டம்நம்பிக்கை மற்றும் ஊக்குவித்தல் தான், உண்மையான தலைமைக்கு அடையாளம். சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, அதன் பின், மேலும் பலமாக உருவாவதில் தான், தலைமையில் வெற்றி அடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்ட பின், உலகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை, வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில், நரேந்திர மோடியை போல், ஒரு பிரதமரை பெற்றுள்ளது, இந்தியாவின் அதிர்ஷ்டம். கடந்த வாரத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், வாய்ப்புகளை, பிரதமர் நன்கு புரிந்துகொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ஜாவடேகர்மத்திய அமைச்சர் ,கட்டுரையாளர்
மத்தியசுற்றுச்சூழல், வனம், பருவ நிலை மாற்றம்; தகவல், ஒலிபரப்புத் துறை; கனரகத் தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் துறையின் அமைச்சர்.
கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை, இவருடைய சொந்தக் கருத்துகள்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
21-மே-202000:34:53 IST Report Abuse
தல புராணம் "மத்திய அரசு இந்த கரோனா வந்த பிறகு இதைச் சாதித்துவிட்டோம், அதைச் சாதித்துவிட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.இதுதான் இவர்களின் சாதனை"
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
22-மே-202000:52:20 IST Report Abuse
தல புராணம்நல்லா வருவீங்க.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-மே-202000:33:55 IST Report Abuse
தல புராணம் நிலக்கரி, சுரங்கம், ராணுவம், விமான போக்குவரத்து, விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன - ஒரு துறையை விடாமல் விற்று விட்டார்கள். முதல் அணுகுண்டு அமெரிக்காவை எதிர்த்து இரும்பு பெண்மணி இந்திரா காந்தி தலைமையில். இரண்டாம் அணுகுண்டு சோதனை அடல் தலைமையில். ஆனால் இன்று, குண்டூசி கூட தயாரிக்க துப்பில்லாதவன் கையில் ஆயுத தயாரிப்பு. பொதுத்துறை நிறுவனத்தின் கழுத்தை நெரித்து கொன்று.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-மே-202000:28:53 IST Report Abuse
தல புராணம் மாநில அரசுகள் கடன் வாங்கும் சக்தியை, 3 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது, மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று. கடனில் மூழ்கி சாவதற்கு. பணம் கொடுக்கும் கந்துவட்டிக்காரனிடம் மானமிழந்து நிற்கும் குடும்பஸ்தன் நிலைமை தெரியுமா? அது போலத்தான் கடன் கொடுத்த மேலை நாட்டின் அடிமையாக நமது ஏழைகளை வஞ்சித்து கொன்றொழித்து சுரண்டி ஆட்சி நடத்தணும். இதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்ளும் தற்குறி அமைச்சர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X