சர்ச்சைக்குரிய இடங்களுடன் வரைபடம் ; நேபாள அமைச்சரவை ஒப்புதல்

Added : மே 19, 2020
Share
Advertisement

காத்மாண்டு : இந்தியா மற்றும் நேபாளம் இடையே, சர்ச்சைக்குரிய லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்களுடைய எல்லைக்குட்பட்டதாக காட்டும் புதிய, தேசிய வரைபடத்தை வெளியிடுவதற்கு, நேபாள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா மற்றும் நேபாளம் இடையே அமைந்துள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்துக்குட்பட்டதாக காட்டும், புதிய அரசியல் தேசிய வரைபடத்தை, இந்திய அரசு கடந்தாண்டு, அக்டோபரில் வெளியிட்டது.இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, லிபுலெக் பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம், 90 கி.மீ., துாரம் சுற்றி செல்வது தவிர்க்கப்பட்டது.

சமீபத்தில் இந்த சாலையை, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் துவங்கியது. இந்த, 335 கி.மீ., பரப்புள்ள நிலத்தை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி, தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை, அந்தநாட்டின் வெளியுறவு அமைச்சர், பிரதீப் குமார் காவாலி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X