பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவி வழங்கல்

Added : மே 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், ஆரோவில், வானுார், கிளியனுார் மற்றும் மரக்காணம் போலீஸ் நிலையங்களில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர், தன்னார்வலர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆரோவில் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல் இருதயராஜ், சரவணன், செந்தில்வேலன் முன்னிலை வகித்தனர். எஸ்.பி., ஜெயக்குமார், 80 நபர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், முக கவசம், கையுறை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பாபு, ஏழுமலை, விஜயகுமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X