கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஹோமியோபதி' மருந்து: ஐகோர்ட்டில் அரசு தகவல்

Added : மே 19, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, 'ஹோமியோபதி' மருந்து வழங்கப்படுவதாக, உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பாடியை சேர்ந்த, ஹோமியோபதி மருத்துவர், ஜெ.பூவேந்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும், ஹோமியோபதி மருந்தான, 'ஆர்செனிகம்

சென்னை : கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, 'ஹோமியோபதி' மருந்து வழங்கப்படுவதாக, உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பாடியை சேர்ந்த, ஹோமியோபதி மருத்துவர், ஜெ.பூவேந்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும், ஹோமியோபதி மருந்தான, 'ஆர்செனிகம் ஆல்பம் -30' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான, 'ஆயுஷ்' இதை பரிந்துரைத்துள்ளது.பெரும்பாலான மாநில அரசுகள், இதை முழுமையாக அமல்படுத்தவில்லை. கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் தான், பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்தி, வைரஸ் பரவலை குறைத்துள்ளன.தமிழக அரசு, 'ஆரோக்கியம்' என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கான, உத்தரவை பிறப்பித்தது.

இத்திட்டத்தில், ஹோமியோபதி மருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களுக்கு இதை வழங்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.மருந்தின் விலை மிகவும் குறைவு என்பதால், அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படாது. எனவே, பொதுமக்கள், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, இலவசமாக ஹோமியோபதி மருந்து வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், பி.வேலுமணி ஆஜரானார்.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜரானார்.''ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருப்பவர்களுக்கும், ஹோமியோபதி மருந்து அளிக்கப்படுகிறது,'' என்றார்.அரசு பிளீடரின் வாதத்தை பதிவு செய்து, வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X