விவசாயியை தாக்கியமூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை தாக்கியமூன்று பேர் கைது

Added : மே 19, 2020
Share

திருவெண்ணெய்நல்லுார், மே 20-

திருவெண்ணெய்நல்லுார் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ரங்கன் மகன் சிவா, 47; விவசாயி. இவர் கண்ணாரம்பட்டு பகுதியில் உள்ள தனது நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது திருவெண்ணெய்நல்லுார் காந்திகுப்பம் காலனியைச் சேர்ந்த பஞ்சாயிதம் மகன் கோபால், 22; ரவிச்சந்திரன் மகன் ராதாகிருஷ்ணன், 22; ரவி மகன் அஜித், 21; ஆகியோர் சிவா நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் மற்றும் இளநீர் பறித்துக்கொண்டிருந்தனர்.இதனை தட்டிக்கேட்ட சிவாவை மூவரும் தாக்கினர். இதனைத் தடுத்த அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சுரேஷ், விஜயகுமார் ஆகிய 4 பேரையும் தாக்கி, பைக்கை சேதப்படுத்தினர்.இது குறித்து சிவா கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, கோபால், ராதாகிருஷ்ணன், அஜித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X