பொது செய்தி

தமிழ்நாடு

இசை கலைஞர்களுக்கு உதவி: அரசு பதில் அளிக்க உத்தரவு

Added : மே 19, 2020
Share
Advertisement

சென்னை : நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத இசை கலைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்து, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை தலைவர், குகேஷ் தாக்கல் செய்த மனு:தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட, 15 மாவட்டங்களில் தான், நாதஸ்வரம், தவில் மற்றும் தாள கலைஞர்கள் பெரும்பாலும் உள்ளனர்.இந்த கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. திருமணம், கோவில் விழாக்களை நம்பியே, இந்த கலைஞர்கள் உள்ளனர்; சொற்ப வருமானமே வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், திருமண நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன; கோவில்களும் மூடப்பட்டுள்ளன. பட்டினியால் வாடும் பாரம்பரிய கலைஞர்களுக்கு, குறைந்தபட்சம், 5,000 ரூபாய் வழங்கக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்.மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

நல வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்பட்டிருப்பதாக, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.வாரியத்தில் உறுப்பினராக இல்லாத இசை கலைஞர்களுக்கும், உதவித் தொகை வழங்கும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் கோரினார். அதற்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X