பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு அழைப்பு

Added : மே 19, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:எண்ணெய் வித்து பயிர் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்கும் என மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது: இந்திய விவசாய பொருளாதாரத்தில், எண்ணெய் வித்துக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனாலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால் பல நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.
இதற்கு தீர்வாக எண்ணெய் வித்து சாகுபடியில் ஈடுபட்டால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதோடு, எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வாய்ப்பு உருவாகும். இந்த வித்து பயிர்களில் முக்கியமானதாக நிலக்கடலை உள்ளது.மடத்துக்குளம் மற்றும் அருகிலுள்ள தாலுகா பகுதிகளில், தாரணி வி ஆர் ஐ 6, 8 ஆகிய ரகம் உற்பத்தி செய்யும் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இந்த நிலக்கடலை பண்ணையில் அறுவடை பணி நடக்கிறது.
ஒரு செடிக்கு, 60 முதல் 20 காய்கள் வரை பிடித்துள்ளதால், ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம், ஒரு டன் நிலக்கடலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விதைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, 'தேர்ச்சி பெறும் விதைகள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும். சுத்திகரிப்பு பணி முடிவடைந்த பின்பு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரசு அனுமதி பெற்ற ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். இங்கு முளைப்புத்திறன், சுத்தம், ஈரப்பதம் ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சில நடைமுறைக்கு பின்பு சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தயாராகிறது.
தற்போது மடத்துக்குளம் மற்றும் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த விதைகள் உள்ளன. எண்ணெய் வித்து பயிர் பண்ணை அமைக்க விரும்புபவர்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற விதைகள் பெற்று விதைப்பு செய்யலாம்.பின்னர் சாகுபடி செய்த நிலத்தின் வரை படம், பட்டியல்கள் ஆகியவற்றுடன் மூன்று நகல்கள் இணைத்து, இணையம் மூலம் திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X