பொது செய்தி

தமிழ்நாடு

'பொட்டாஷ்' விலை குறைப்பு: ஊரடங்கு நேரத்தில் சலுகை

Added : மே 19, 2020
Share
Advertisement

ஆனைமலை:தமிழகம் முழுவதிலும் ஊரடங்கால் பாதித்துள்ள விவசாயிகளுக்காக, 'பொட்டாஷ்' உரத்தின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.கோவை வேளாண்துறையினர் அறிக்கை:தமிழகம் முழுவதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் ஆர்வத்துடன், நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பொட்டாஷ் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், ஊரடங்கால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம், ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்தின் விலையை, 950 ரூபாயில் இருந்து, 875 ரூபாயாக குறைத்துள்ளது. 18ம் தேதி (நேற்று) முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது. பொட்டாஷ் உரத்துக்கு நிர்ணயித்த விலையை விட, உரக்கடைக்காரர்கள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X