ஜோசப் கல்லுாரி நிவாரண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜோசப் கல்லுாரி நிவாரண உதவி

Added : மே 19, 2020
Share

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் ஜோசப் கல்லுாரி மற்றும் கமலா கல்வியியல் கல்லுாரி சார்பில் கொரோனா பாதித்த கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திருநாவலுார் ஜோசப் கல்லுாரி மற்றும் கமலா கல்வியியல் கல்லுாரி சார்பில், கொரோனா பாதித்த கிராமப்புற மக்களுக்கு, அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை செயலாளர் டாக்டர் பிரபாகர் ஜெயராஜ் வழங்கினார்.மேலும், பல்வேறு குழுக்களாக பிரிந்து நிவாரண பொருட்களை, பேராசிரியர்கள் சிவக்குமார், ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் வழங்கினர். தென்மங்கலம் சபை போதகர் நிக்கோலஸ், பரிக்கல் சபை போதகர் பாக்யநாதன் ஆகியோரும் கல்லுாரி சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X