சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பினர் மோதல் 10 பேர் மீது வழக்கு

Added : மே 19, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் சந்தைப்பேட்டையில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார், சந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் சலீம். இவரது தம்பி அப்ரோஸ். இருவரும் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இளையராஜா அவர்கள் மீது மோதுவது போல் வந்தார்.இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இளையராஜா அவரது ஆதரவாளர்கள் கலைதாசன், அஜித், ஜாவித், கமால், இம்ரான் ஆகியோர் சலீமை தாக்கி மிரட்டினர். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார், இளையராஜா உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X