பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதானியங்கள் மதிப்பு கூட்டி விற்பனை பயிற்சியளிக்க

Added : மே 19, 2020
Share
Advertisement
 சிறுதானியங்கள் மதிப்பு கூட்டி விற்பனை பயிற்சியளிக்க

உடுமலை:கம்பு உட்பட சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து, வேளாண்துறை மூலம் பயிற்சியளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கும், மானாவாரியாகவும், சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.இதில், கம்பு, வறட்சியை தாங்கி வளர்வதால், அனைத்து சீசன்களிலும் பயிராகிறது. கம்பு வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகிய கால உணவு தானியப் பயிராகும். ஏக்கருக்கு, 400-600 கிலோ விளைச்சல் கிடைக்கிறது.
இந்நிலையில், அறுவடை சீசனில், போதிய விலை கிடைக்காமல், கம்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக கம்பு உட்பட சிறு தானியங்களில் இருந்து, மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கம்பு தானியத்தில், புரதம் உட்பட பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாகும். எனவே, கம்பு பிஸ்கட் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.இத்தகைய பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தால், கம்புக்கு நிலையான விலை கிடைக்கும். இது குறித்து வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X