பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு சந்தேகத்துக்கு ஆலோசனை குழு அமைப்பு

Added : மே 19, 2020
Share
Advertisement

உடுமலை:பொதுத்தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மாவட்ட வாரியாக ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இத்தேர்வினை, மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வகையில், அவர்களின் பயத்தை போக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, மாணவர்கள் தொடர்புகொள்ள வசதியாக, ஒரு நேர்முக உதவியாளர், நான்கு முதுநிலை ஆசிரியர்கள் உடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், சி.இ.ஓ., அலுவலகத்தில் தயார் நிலையில் இருக்கும்படி, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இதன்கீழ் திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் நேர்முக உதவியார் அழகிரிசாமி உட்பட, 4 முதுநிலை ஆசிரியர்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு சம்பந்தமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்க, இக்குழு தயாராக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X