பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி

Added : மே 19, 2020
Share
Advertisement

கராச்சி : பாக்.,கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

அண்டை நாடான, பாக்.,கின் தென் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், பிர் கெய்ப் பகுதியில், ஈரான் மற்றும் ஆப்கன் நாடுகளின் எல்லை பகுதிகள் உள்ளன. இங்கு, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், பணியில் இருந்த ராணுவ வீரர்கள், ஒரு வாகனத்தில் புறப்பட்டனர்.அதில், பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில், ஆறு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அதேபோல், பலுாசிஸ்தான் மாகாணத்தின் கெச் பகுதியில், பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில், மற்றொரு ராணுவ வீரர் பலியானார்.

2 பயங்கரவாதிகளுக்குமரண தண்டனைபாக்.,கின் சிந்து மாகாணத்தில் செஹ்வான் ஷெரீப்பில் உள்ள, லால் ஷாபாஸ் கலந்தர் கோவிலில், 2017ம் ஆண்டு, பிப்., 16ல் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 82 பேர் பலியாயினர்; நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் நாதிர் அலி மற்றும் பர்கான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீதான விசாரணை, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், இருவருக்கும் மரண தண்டனை விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி முஷ்டாக் அலி ஜோக்கியோ தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X